ஆறுபடை வீடுகளில் தனிச்சிறப்பு கொண்ட திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு பல உரிமைகளும் வசதிகளும் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டன.
கோயிலின் பழமையான கற் சுவரையே உடைத்துப்பார்க்கத் துணிந்தனர்.
தற்போதுள்ள அரசு புதிய தக்காராக கோட்டை மணிகண்டன் என்பவரை நியமித்துள்ளது.கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பொது தர்மதரிசனத்தை
உடனடியாக பக்தர்களுக்கு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட நாள் கோரிக்கையாக இதனை வைத்துக் கொண்டிருந்த அகில பாரதமுருக பக்தர்கள் பேரவையின் தேசிய தலைவர் எஸ்.எஸ்.ஆதித்தன் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.