<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> அமைவிடம் | Tiruchendhur | திருச்செந்தூர்

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டத்தில் திருச்செந்தூர் [THIRUCHENDUR] அமைந்துள்ளது. கடற்கரைக்கோயில் நகரமானதிருச்செந்தூர் ,வடக்கு அட்ச ரேகை 8.483 டிகிரியும் கிழக்குதீர்க்கரேகை 78-1167 டிகிரி என்னும் பாகையில் அமைந்துள்ளது.சங்க காலச்சிறப்பு மிக்க இவ்ஊரின் எல்கைகளாக இவ்வூரோடும் முருகப்பெருமானோடும்
தொடர்புடைய சோனகன்விளை[SONAGANVILAI],
அம்மன்புரம்[AMMANPURAM],
குலசேகரன்பட்டினம்[KULASEKARANPATINAM],
வீரபாண்டியன்பட்டினம்[VIRAPANDIANPATINAM],
காயல்பட்டினம்[KAYALPATINAM]
ஆறுமுகனேரி[ARUMUGANERI] ஆகிய ஊர்கள் உள்ளன.

கோயிலின் மூலவர் உற்சவர் விபரம்
மூலவர் -அருள்மிகு பாலசுப்பிரமணியர்
உற்சவர் -அருள்மிகு சண்முகர்,ஜெயந்திநாதர்
                         குமாரவிடங்கப்பெருமாள்,
                         அலைவாய் உகந்தபெருமாள்
அம்மன் -அருள்மிகு வள்ளி ,அருள்மிகு தெய்வானை
தீர்த்தம் -கந்தபுச்கரணி [நாழிக்கிணறு],சரவனப்பொய்கை
தலமரம் -பன்னீர் மரம்
பாடியவர்கள் -நக்கீரர்,பகழிக்கூத்தர்,அருணகிரிநாதர்,
              குமரகுருபரர்,வென்றிமாலைக் கவிராயர்

பழமையும் சிறப்பும்-பெயர்க் காரணமும்
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தின் தென் கோடியில் தலைசிறந்த கடற்கரைப்பட்டினமாக விளங்கிய கபாடபுரம்,இன்றைய திருச்செந்தூராகும்.
    தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில்அமைந்துள்ள திருச்செந்தூர் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலப் பகுதியாகும்.ஓயாமல்அலைகள் அடித்துக் கொண்டிருந்ததால்அலைவாய் என்றும் முற்காலத்தில் அழைக்கப்பட்டது.
            1986 வரை திருநெல்வேலி மாவட்டத்திலும் தற்போது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகப்பிரிவிலும் உள்ள திருச்செந்தூர்,சங்ககாலத்தில் குட நாடு என்ற நிர்வாகப்பிரிவில் இருந்தது. ஊரின் மேற்கே பசுமையான வயல் வெளிகளும்,தோட்டங்களும், தெற்கே உவர் நிலங்களும் காணப்படுகின்றன. இவ்விருவகை நிலங்களுக்கும் மகடம் வைத்தாற்போல பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்று உள்ளது.வெள்ளைப் பாறைகளால் ஆன இக்குன்று சந்தனாமலை என்று போற்றப்படுகிறது.குறிஞ்சி நிலக்கடவுளான முருகப்பெருமான் இம் மலையில்அமர்ந்துள்ளார்.இம்மலை மீது அமையப் பெற்ற 134 அடிக்கோபுரம் திருச்செந்தூருக்கு வெகு தொலைவில் வரும் போதே நம்மை வா...வா என்றழைக்கும்.கையெடுத்து தலை மீது வைத்துத் திசைநோக்கித் தொழ வைக்கும்.

பெயராய்வு
      மக்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து இனங் காண பெயர்களை வழங்கியது போல தாங்கள் வசித்த இடத்திற்கும் பெயரிட்டுப் பெருமை கொண்டனர்.இயற்கையோடு தங்கள் வாழ்வு நெறி முறைகளை இணைத்துக் கொண்டனர்.இயற்கையோடுதங்களுடைய தங்களுடைய தெய்வங்களை வழிபட்டுக் கொண்டனர்.இயற்கைப் பெயரினை தாங்கள் வாழ்ந்த இடத்திற்கு இட்டுக்கொண்டனர்.இவ்வடிப்படையிலேயே திருச்செந்தூர் என்ற பெயர் பல்வேறு மாற்றங்களைப் பெற்று உருவாயிற்று.
கபாடபுரம்
          ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாண்டிய மன்னர்களின்
இரண்டாம் தமிழ்ச்சங்கம் செயல்பட்ட கபாடபுரம் என்ற 
தமிழூர் திருச்செந்தூர் ஆகும்.கபாடம் என்றால் முத்து.உலகம் போற்றிய ஒளிவிடும் முத்து விளைந்த பகுதியாக திருச்செந்தூரின் கடற்பகுதி முன்னாளில் விளங்கியது.
  கபாடபுரம் பற்றி வால்மீகி தான் இயற்றிய இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில் இல்ங்கை நோக்கிச்செல்ல இருந்த அனுமனுக்கு சில அறிவுரைகளைக் கூறும் போது,
      ‘ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஸ்யதம்
      முக்தா கபாடம் பாண்ட்யானாம் கதா திருக்யசவானரா’
என்று கூறுகிறார்.
    ‘தமிழ் நாட்டில் தென்பாண்டி நாடான மதுரையைக் கடந்து நீ செல்லும்போது முத்லில் ஒரு ஊர் வரும்.அங்கு நீ இறங்கி விடாதே.இறங்கி விட்டால் அந்த ஊரை விட்டு நீ இலங்கைசெல்ல உன் மனம் விரும்பாது.ஏனெனில் அங்குள்ள நாகரீகமும்;பண்பாடும் உன்னை இழுக்கும் எனவே அங்குநிற்காமல் தொடர்ந்து போ அதற்கு அடுத்தாற்போல இலங்கைவரும்’ இராமாயணக் காலத்தில் கபாடபுரம் இருந்தது என்பதும் உறுதியாகிறது.
   முதலில் தமிழ்ச்சங்கம் குமரி நாட்டில் தென் மதுரையில்
செயல்பட்டது.கடல் கோளினால்[சுனாமி]குமரி நாடு அழியவே
வடதிசை நோக்கிக் குடிபெயர்ந்தனர்.குமரியாற்றிற்கும் தாமிரபரணிக்குமிடையே உள்ள கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் தழிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.பாண்டிய மன்னருள் அப்பேறு பெற்றவன் வெண்தேர்ச்செழியன் ஆவான்.அவனைத் தொடர்ந்து 59 பாண்டியமன்னர்கள் ஆண்டனர்.அந்நாளிலும் கடல் கோள்[சுனாமி]ஏற்படவே, கடைசி அரசனான முடத்திருமாறபாண்டியன் தப்பிப் பிழைத்து தற்போதுள்ள மதுரையைத் தலைநகராகக் கொண்டு கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தான். இஃது தமிழறிஞர்களின்கூற்று ஆகும்.
   இரண்டாம் தமழ்ச்சங்கத்தின் காலம் கி.மு.6804 முதல்கி.மு.3105 வரை ஆகும்.3700 ஆண்டுகள் கபாடபுரம் பொருணை[தாமிரபரணி]ஆற்றின் முகத்துவாரத்தில் [அலைவாய்]இருந்தது.இச்சங்கத்தில் அகத்தியர்,குன்றம் எறிந்தகுமரவேள்[முருகன்]ஆகியோர் புலவர்களாக இருந்தனர்.73 புலவர்கள் கவி பாடி அரங்கேற்றினர்.கபாடபுரம் என்றபெயர் காலவெள்ளத்தில் வழக்கொழிந்து போனது.   திருச்செந்தூரில் காண்ப்படும் கல்வெட்டொன்று,
‘திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று இவ்வூரைக்குறிப்பிடுகிறது. இப்பெயரும் வழக்கொழிந்து போயிற்று.சதுர் வேதம் என்றால் நான்கு வேதங்களாகும்.நான்கு வேதங்களும் இடையறாது ஒலிக்கும் ஊர் என்றும்,அவ் வேதங்களை ஓதும்அந்தணர்களுக்கு[வேதியர்களுக்கு]தானமாகக் கொடுக்கப் பெற்றஊர் என்றும் பொருள்படும்.வேதியர்களான திரிசுதந்திரர்கள்2000 மக்கள் திருச்செந்தூரிலிருந்து முருகனுக்குத் தொண்டுசெய்து வந்தனர்.இன்றும் அவர்களது வாரிசுகள் உள்ளனர்.

Thiruchendur Murugan Temple or Tiruchendur Senthilandavan Koil is one of the most famous Lord Muruga Temples in Tamil Nadu, situated at Thiruchendur, 55 km south east of Tirunelveli, in Thoothukudi (Tuticorin) district, Tamilnadu. Also known as Sri Senthil Andavar Temple and Thiruchendur is said to be second among his six abodes (Arupadaiveedu). The other five Muruga temples in the Aarupadai Veedu are Pazhani Murugan Temple, Swamimalai Temple, Thiruthani Murugan Temple, Pazhamudircholai Muruga Temple, and Thiruparamkunram Temple. Lord Subramanya deity is worshipped at Thiruchendur temple as Senthilandavan, Senthilkumaran. Situated near the sea, Thiruchendur Muruga Temple, sometimes referred as Tiruchendur Seashore Temple, is splashed by the waves from the Gulf of Mannar at its eastern perimeter wall.





 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...