<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> கோயிலமைப்பு | Tiruchendhur | திருச்செந்தூர்

கோயிலமைப்பு

கருவறை
   அருட்திரு ஆதிசங்கரர் சுவாமிகள் திருச்செந்தூர் வந்து,முருகனைப் பாடி, தனது நோய் நீங்கப் பெற்ற வரலாறு உண்டு.சுப்பிரமணியப் புஜங்கம் அன்ற அப்பாடல்கள் அக்காலத்தில் கோயில் கருவறை பாறையினுள் குடையப் பெற்ற குகையினுள் இருந்தது என்று கூறுகிறது.
   ‘செந்தூர் கடற்கரை வந்துற்ற போதே பஞ்சமா பாதகம் பறந்திடும்
    கந்தமாமலைக் குகை வந்தன காணவே
    விழியெலாம் போற்றிடும் ஆறுமுகன் குகையிலே
    கதிரவன் ஆயிரம் செவ்வொளி’
                               [சுப்பிரமணியப் புஜங்கம்]
   5 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மணற் படிவுப் பாறையில் முற்காலப் பாண்டிய மன்னர்களின் குடைவரைச்சிற்பத்திற்குச் சான்று கூறுவதாக குகைக் குடைவரை உள்ளது.
பாலசுப்பிரமணியர் 
   கருவறைத் தெய்வமாக பாலசுப்பிரமணியர் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் உள்ளார்.ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட அவரது மேற்கையில் தாயான சக்தி வேல் உள்ளது.கீழ்க்கை அடியவர்களுக்கு வரமளிக்கிறது.இடது மேலே உள்ள கை செபமாலையுடன்,கீழே உள்ள கை தொடையைப் பற்றியவாறு உள்ளது.  சூரபத்மனை அழித்த பின்பு அத் தீவினை அகல தம்முடைய தந்தையை வழிபடும் எழிலானத் தோற்றத்துடன் உள்ளார். தம்மைக் காண வந்த தேவர்களை தம்முடைய தலையை லேசாகத் திருப்பி ஓரக்கண்ணால் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ளது வேறெங்கும் காணயியலாத அற்புதமாகும்.பிரமனின் செபமாலையைக் கொண்டுள்ளதால் பிரமனின் படைப்புத்தொழிலையும் செய்பவராகிறார்.
 பாலசுப்பிரமணியருக்கு வலப்புறம் தந்தையான

5 லிங்கங்கள்
5 லிங்கங்கள் உள்ளன.பின்புறம் செகநாதர் எனப்படும் சந்திர லிங்கமும்
இடது புறம் செகநாதர் எனப்படும் சூரிய லிங்கமும் உள்ளனர்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற தமிழரின் உயர்ந்த பண்பாட்டினைக் காட்டுவதாக உள்ளது.
கருவறையின் முன்பாக அர்த்த மண்டபம் .அதன் வாசலில்காவலர்களாக முருகனின் தளபதிகளும் பார்வதியின் காற்சிலம்பின் நவமணிகளுல் மாணிக்கவல்லியிடம் தோன்றிய வீரபாகுவும்,புட்பராகவல்லியிடம் தோன்றியவீரமாமகேந்திரரும் உள்ளனர்.  
சண்முகர்
   கருவறையின் முன்பாக இடது புறம் சண்முகர் சந்நிதி உள்ளது.இவர் ஆறு முகமும் பன்னிரு கரமுடன் உள்ளார்.    சண்முகம் என்றால் ஆறுமுகம் என்று பொருள் படும்.
   தென்திசை நோக்கி நின்ற நிலையில் உள்ளார்.அவருடன் இடப்புறம் வள்ளி நாயகியும்,இடப்புறம் தெய்வானை நாயகியும் உள்ளனர்.பன்னிரு தோள்களிலும் அமைந்துள்ளகரங்களில் வலது கைகளில் அபயம்,பாசம்,சக்கரம்,குறு வாள்,அம்பு,சக்திவேல்,இடதுகைகளில் வரதம்,
அங்குசம்,சேவற்கொடி,கேடயம்,வில்,வஜ்ரம் ஆகியன உள்ளன.
   திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஆறுமுகனின் எழிலான
திருக்கோலத்தைக் கூறுகின்ற போது,வானவருக்கு அருளுதல்,கழுத்தில் தொங்குகின்ற மாலையைப் பிடித்தல்,மார்போடு பொருந்துதல்,தொடை மேல் அமையப்பெற்ற மணியை ஒலித்தல்,தேவிக்கு மாலையைச் சூட்டுதல், துடியைப் பற்றுதல் ஆகிய செயல்களைச் செய்வதாகக் கூறுகின்றார். தற்போதுள்ள ஆறுமுகனின் வடிவம் வேறுபட்டுள்ளது ஆய்வுக்குறியது.
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் சண்முகர் வட்ட வடிவ அலங்காரத் தூண்கள் கொண்ட மூன்றடி உயர மேடையில் உற்சவ மூர்த்தியாக உள்ளார்.

அர்த்தமண்டபம்
கருவறையை அடுத்து அர்த்தமண்டபம் [இடை நாழி] உள்ளது.
கருவறை பலமற்ற வெள்ளைப்படிவுப்பாறைகளால்அமைந்தது. அதைத்தொடர்ந்து அர்த்த மண்டபம் கருங்கல்லால்அமையப் பெற்றது.மேலும் பாறையைச் சுற்றிலும் மூடியவாறு கருங் கல்லால் கட்டப்பட்டுள்ளது.
 அர்த்தமண்டபம் [இடை நாழி]யில் நின்று திரிசுதந்திரர்கள்முருகனுக்கு அர்ச்சனை மற்றும் பாடல்களைப் பாடித் தொண்டு செய்கின்றனர்.அர்த்த மண்டபத்தின் இரு புறமும்முருகனின் படைத்தளபதிகளான வீரபாகுவும், வீரமகேந்திரரும் உள்ளனர்.அர்த்தமண்டபம் நுழைவு வாசல் நிலையில் விநாயகரின் சிற்பம் உள்ளது.  

மகா மண்டபம்
 அர்த்தமண்டபம் [இடை நாழி]யை அடுத்துள்ள மகாமண்டபம்
பக்தர்கள் நின்று வழிபடுவதற்குரிய இடமாகும்.எழிலானச் சிற்பங்களுடன் அமைந்துள்ள இம் மகா மண்டபம் கருவறை மூலவரான கிழக்கேப் பாலசுப்பிரமணியருக்கும் உற்சவ மூர்த்தியான தெற்கேப்பார்த்த வள்ளி தெய்வானை சமேதரான சண்முகருக்கும் பொதுவானதாகஅமைந்துள்ளது.
மகாமண்டபத்தில் வீரபாகுவிற்கு வலது புறம் உள்ள மேடையில் அருள்மிகு கரியமாணிக்க வினாயகரும், அருள்மிகு பார்வது அம்ம்மனும் உள்ளனர்.இவர்களுக்குப் பின்புறம் சிறிய துளை அமைப்பு உள்ளது.அவ் வழியேப் பார்த்தால் பஞ்ச லிங்கங்கள் தெரிகின்றன. மகாமண்டபத் தூண்கள் சிற்ப சாஸ்திரப்படி அமையப் பெற்றது.நாகபந்தம்,சதுரம், இடைக்கட்டு,குடம், கமலம்,பலகை மற்றும் போதிகையும் உள்ளது.போதிகையின் அமைப்பைக் கொண்டு பார்த்தால் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இம்மண்டபத்தின் வட மேற்கு மூலையில் பஞ்சலிங்கத்தை வழிபடச்செல்வதற்கான குடைவரை வழி உள்ளது.தொடர்ந்து செந்தில் நாயகர் சன்னிதி உள்ளது.அதனுள்ளே கருவூலஅறை உள்ளது.  இவ்வறைக்கு இடப்புறம் ஆறுமுக நயினார்[சன்முகர்] கருவறை,அர்த்த மண்டபம் உள்ளது.இவரைச் சுற்றி வருவதற்க்கு சிறிய பாதையும் உண்டு. இச்சன்னிதிக்கு இடப்புறம் உள்ள அறையில் அலைவாயுகந்தப் பெருமான்,அஸ்திரத்தேவர், நடராசர்,வினாயகர்,சேரமான் பெருமான் நாயனார், அப்பர்,சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் அய்ம்பொன் படிமங்கள் உள்ளன.இவர்களை வழிபட்டு கிழக்கு வாசல் வழியாக வெளியேறினால் தங்கக் கொடிமரத்தைக் காணலாம்.இப்பொழுது முதல் திருச்சுற்றிற்கு வந்துள்ளோம்.



முதல் திருச்சுற்று
    தங்கக் கொடிமரத்தைக் கும்பிட்டு விட்டு வலமாகச் சென்றால் தென் கிழக்கு மூலையில் மடைப்பள்ளி உள்ளது.அதற்கு முன்பாக இடது புறம் உள்ள திண்ணையில் சிறிய யாககுண்டம் உள்ளது.தினசரி கோயில் நடை திறந்து வழிபாடு தொடங்கும் போது இந்த யாககுண்டத்திலிருந்து விநாயகருக்குப் பூஜை செய்து அதிலிருந்து நெருப்பினை எடுத்துச் சென்று தீபம் ஏற்றுவது வழக்கம்.
   தொடர்ச்சியாக இரண்டாம் திருச் சுற்றிலிருந்து முதல் திருச்சுற்றிற்கு வரும் ஆறு படிக்கட்டுகளும், அதனுடைய மேற்புறம் வள்ளி,தெய்வானை சமேதராக குமாரவிடங்கப்பெருமானின் சன்னிதியும்உள்ளது.வில்லேந்திய  முருகனின் அரியத் தோற்றம்.வலக்கைகளில் முன்கை அம்பினைப் பற்றிக் கொண்டும் ,பின் கை சக்தி வேலினைப் பற்றிக் கொண்டும் உள்ளது.இடக்கைகளில் முன் கை வில்லினைத்தாங்கிப் பிடித்தவாறும்,பின்கை வச்சிராயுதத்தைப் பிடித்தவாறும் உள்ளது கலியுகக் கந்தப் பெருமானின் அருள்திறத்தைக் காட்டுவதாக உள்ளது.
     குமாரவிடங்கப்பெருமான் வள்ளி,தெய்வானை சமேதராக
திருக் கல்யாணங்களுக்கு எழுந்தருளும் பெருமை பெற்றுள்ளதால் ‘மாப்பிள்ளைச் சாமி’ என்று பக்தர்களால் பாசமுடன் அழைக்கப்படுகிறார்.
   கருவறையின் மூன்று வெளிப்[சுவர்களிலும்]பக்கங்களிலும்
தேவக்கோட்டங்கள் உள்ளன.தெற்கேயுள்ளதேவக்கோட்டத்தில்
தட்சிணாமூர்த்தியின் அருள் பொழியும் சிற்பம் உள்ளது.
சிவபெருமான் ஆசிரியராகக் காட்சி தரும் படிமம் இது.இவரது வலது கால் பீடத்திலிருந்து தொங்கிக்கொண்டு, கீழே விழுந்து
கிடக்கும் முயலகனை மிதிதவாறு உள்ளார்.இடது காலை மடித்து வைத்து உள்ளார்.ஞானத்தின் வடிவமான கல்லால மரத்தின் கீழ் சின் முத்திரையுடன் புன் முறுவலுடன் உள்ளார்.கூர்ந்து நோக்கிப் பார்த்தால் புன்னகையைக் காணலாம்.
   தட்சிணாமூர்த்தியின் முன்புறம் திண்ணையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் எழில் மிகுச் சிற்பங்கள் தனித் தனியே வரிசையாக வட திசை நோக்கி கை கூப்பியவாறு உள்ளனர்.இவர்களுக்கு அருள் தந்தவாறு கிழக்கு திசையைப் பார்த்தவாறு பார்வதி அம்மன்,வினாயகர்,சிவலிங்கம் உள்ளனர்.தொடர்ந்து கிழக்கு திசையை நோக்கியவாறு
     வள்ளி அம்மன் கோயில் உள்ளது.கருவறை,அர்த்த மண்டபத்துடன் வடக்கு நோக்கி ஏறி இறங்கும் படிக்கட்டுடன் அமையப் பெற்ற இச்சன்னிதியில் தாமரைப் பூவை இடக்கையில் பிடித்தவாறு வலக்கையை எழிலாகத் தொங்க விட்டவாறு கருணையே வடிவாக அன்னை அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.அர்த்த மண்டபத்துடன் வட பகுதியில் சுவாமியின் பள்ளியறை உள்ளது.சுவாமியின் திருப் பள்ளியெழுச்சியைக் காண்பதற்கேதுவாக அர்த்த மண்டபத்தின் தெற்குப் பகுதியில் வாசலொன்று அமைக்கப்பட்டுள்ளது. இச் சன்னிதியில் சாம்பிராணிப் புகை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.குங்குமப் பிரசாதம் வழங்கப் படுகிறது.
    வள்ளி அம்மன் கோயில் கருவறை ,அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் அதிஸ்டானம்,பிரஸ்தரம்,ஆகியன அதி நுட்பமானகலை நயத்துடன் உள்ளன்.அபிசேக நீர் வெளியேற பிரணாளஅமைப்பு உள்ளது.வள்ளி அம்மனை வழிபட்டு பிரதட்சணமாக [வலதுபுறமாக]வரும் போது பின்புறம் நாகப்பன், சிவபெருமான்,வினாயகர்,அம்பாள்,காசிவிசுவனாதர்,விசாலாட்சி,சங்கரநாராயணர்,நந்தீஸ்வரர்,வேதபுரீஸ்வரர், வாதபுரீஸ்வரர்,நாகனாதேஸ்வரர்
ஆகியோர் தனித்தனிப் பீடங்களில் அமர்ந்துள்ளனர்  இடதுபுறம் யாகசாலை உள்ளது.யாகசாலையின் முன்னால் கோட்ட தேவதையாக மூலவரான பாலசுப்பிரமணியசாமிஇரண்டடி உயரத்தில் மெய் சிலிர்க்கவைக்கிறார். மூலவரை அருகில் நின்று பார்க்க முடியாத மனக்குறையை இவர் போக்குகிறார்.  யாகசாலைக்கு இடதுபுறம் தெய்வானை அம்மன் கோயில் உள்ளது.மூன்றரை அடி உயரத்தில் வலக்கையில் குமுத மலரைப் பிடித்தவாறு இடக்கையை எழிலாகத் தொங்க விட்டவாறு ’யாமிருக்கிறோம் பயம் வேண்டாம்’என்றவாறுதேவர்களின் தலைவனான தேவேந்திரனின் தவப்புதல்விதெய்வானை அம்மன் காட்சி தருகிறார். கருவறை, அர்த்தமண்டபம் கலை நயத்துடன் அமைக்கப்பெற்றுள்ளதுஅர்த்தமண்டபத்தின் வெளிச்சுவற்றில் தென் புறம் சூரசம்காரக் காட்சியும்,  வடபுறம் வள்ளி தினைப்புனத்தைக் காவல் புரியும் காட்சியும் கந்தபுராணத்தை நினைவூட்டுகிறது. தெய்வானை அம்மன் கோயிலுக்கு முன்புறம் மூலவரின் கருவறையின் வடபுற தேவக்கோட்டத்தில் மயிலருகே நிற்கும் மயூரநாதரின் படிமம் காணப்படுகிறது.இவரை வழிபட்டுச்சென்றால் சண்டிகேசுவரரின் கோயில் வரவேற்கும்.சிவன் கோயிலில் அமையப்பெறுமிவர் முருகன் கோயிலில்அமர்ந்துள்ளது ’சிவனும் முருகனும் ஒன்றே’ என்ற அரிய தத்துவத்தை உணர்த்துவதற்கேயாம்.  தொடர்ந்து திருக்கோயிலின் அய்ம்பொன் படிமக் கண்காட்சிக் கூடம் உள்ளது. இங்கு பிற்கால கட்டபொம்மன் வழிபட்ட சிலைகள்,முற்கால பாண்டியர்கள், சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சிலைகளும் காட்சிக்கு வைக்கப் பெற்றுள்ளன.
  அதற்கு இடதுபுறம் நடராசப் பெருமானின் கோயிலாகும்.இச்சிலையானது உலாந்தகர்களால் கொள்ளையடிக்கப்பட்டு செந்திலாண்டவனின் அருளால் மீட்கப்பட்ட அருட் பெருமை வாய்ந்ததாகும்.இவரை வழிபட்டுச் சென்றால் சனீஸ்வரர் தனது காக்கை வாகனம் முன் எழிலாக நிற்கிறார்.இவருக்குப் பரிகாரம் செய்தால் தீவினை அகலும்.இச்சன்னிதிக்கு இடப்புறம் பைரவருடைய கோயில் உள்ளது.சேத்திரபாலர் என்றழைக்கப்படும், இவர் நாய் வாகனத்துடன் நின்ற தோற்றத்துடன் உக்கிரமாக உள்ளார்.தினமும் இரவு கோயிலின் திறவுகோல் இவரிடம் ஒப்படைக்கப்பட்டு,மறுநாள் அதிகாலையில் அங்குச முத்திரையால் திறவுகோலைப் பெறுவர்.தினமும் மடைப் பள்ளியின் அடுப்பைப் பற்ற வைத்திட பைரவர் கோயில் தீபத்திலிருந்து தீபம் ஏற்றி அத்தீயைப் பயன்படுத்துகின்றனர்.முதல் சுற்றில்கருவறை, அர்த்தமண்டபம்,மகாமண்டபம் சுவர்களுக்கருகேபரிவாரதெய்வங்களுக்கான பலி பீடங்கள் உள்ளன.

இரண்டாம் திருச்சுற்று
   இரண்டாம் திருச்சுற்றுக்குச் செல்வதற்காக முதலாம் திருச்சுற்றின் தங்கக் கொடிமரம் வழியாக மேற்கே வெளியேறினால் செப்புக்கொடிமரம் வருகிறது.இக்கொடி மரத்தை வலமாகச் சுற்றி இரண்டாம் திருச்சுற்றுப் பாதையில்தெற்கேச் சென்று பின்பு மேற்கே வர வேண்டும்.ஆறுமுகப் பெருமானின் தோற்றத்தைக் கண்டுவணங்கி நிமிர்ந்தால் யானை மண்டபம் என்றழைக்கப்படும் அயிராவத மண்டபத்தில் நிற்கலாம்.எழில் மிகு அணிவொட்டித்தூண்கள்,நடராசரின் சிற்பம்,ஆறுமுகமும் பன்னீரண்டு கைகளுடன் முருகனின் தோற்றம்,காளை மீதமர்ந்து திருமணக் காட்சி தரும் பார்வதி அம்மன் சமேத சிவபெருமான், முருகனின் காவலர்களின் மிடுக்கான சிற்பங்கள் ஆகியன காண்போரை வியக்க வைக்கின்றன.வாசலில் சேத்திரப்பாலகர்கள் எட்டு அடி உயரத்தில் உள்ளனர்.உள்ளே சென்று கலியுகக் கடவுளான கந்தனைவழிபடுங்கள், வேண்டுபவற்றைத் தருவான். பயபக்தியுடன் செல்லுங்கள் என்று எச்சரிக்கைச் செய்வது போல உள்ளனர்.
         தொடர்ந்து, மேற்கேச் சென்றால் வலப்புறச்சுவற்றில்சிறிய தட்சிணா மூர்த்தி உள்ளார்.அடுத்து அலங்கார மண்டபம் கன்னி மூலையில் வினாயகர், 108 சிவலிங்கம்,சூரசம்கார மூர்த்தியின் சம்காரக்காட்சிகாணப்படுகிறது. முருகப்பெருமான் அன்னை பார்வதி அள்ளித்த சக்தி வேலால் சூரனை அழித்துஅவனது உடலை இரண்டாகப் பிளப்பது போலவும் அதிலிருந்து மயிலும் சேவலும் தோன்றுவது போலவும் புடைச்சிற்பம் அமைந்துள்ளது.
தொடர்ந்து ஆன்மலிங்கம்,அருணகிரிநாதரின் செப்புப் படிமம்உள்ளது. இதனைத்தொடர்ந்து மேலக்கோபுர வாசலிலிருந்து கீழிறங்கும் 27 படிக்கட்டுகள் உள்ளன.இவைகள் நமக்கு விண்ணில் உள்ள 27 நட்சத்திரங்களைக் காட்டுகிறது.இப் படிக்கட்டுகளுக்கு எதிரே மேலக் கோபுர வாசல் வினாயகர் சன்னிதி உள்ளது.பத்து அடி உயரத்தில் கம்பீரத்தோற்றத்தில் இவர் காட்சி அளிக்கிறார். இவருடைய இடது தொடையில்லட்சுமி அம்மனை அமர வைத்து அபயக்கரம் காட்டி தைரியத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்.
  இவரை வழிபட்டுவிட்டு வலமாகச் சென்று இடதுபுறம் பார்த்தால் பள்ளி கொண்டப் பெருமாளின் கோயில் உள்ளது.நிமிர்ந்துப் பார்த்தால் பல லட்சம் ஆண்டு பழமை வாய்ந்த சந்தனாமலையின் ஒரு பகுதியைக் காணலாம்.
          துளசியின் மணம் வீசும் உட்புறம் சென்றால்அரங்க நாதப்பெருமாள் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார்.இடக்கை இடுப்பில் வைத்துள்ளர். வலக்கையில் கீழ்க்கை வரத முத்திரையுடனும், உள்ளங்கை சக்கரப் படையையும் கொண்டுள்ளது. மருமகனான முருகப் பெருமானுக்கு படைக்கலம் தந்தருளும் காட்சியாகும். பாறைப் பகுதியில் ஸ்ரீ கஜலட்சுமியின் மூன்றடி சிற்பமும்,ஆதிசேசனின் மீது ஸ்ரீ பள்ளி கொண்ட பெருமாளின் கிடந்தக்கோலத்தின் பத்து அடி சிற்பமும் முற்காலப் பாண்டிய மன்னர்களின் குடைவரைச் சிற்பக் கலைக்குச் சான்றாக உள்ளது.   பல்லவ மன்னர்களுக்கு முன்பாகவே பாண்டிய மன்னர்கள் பாறைகளைக்குடைந்து கோயில் கட்டும் கட்டிடநுட்பங்களைத் தெரிந்திருந்தார்கள் என்பது அரிய செய்தியாகும்.
 ஸ்ரீ செந்தில்கோவிந்தர் மேற்கேத் தலை வைத்து தெற்குநோக்கிப் படுத்துள்ளார்.ஸ்ரீ பூதேவி[மண்மகள்]பாதத்தருகேயும்,ஸ்ரீ நீளா தேவி [ஆயர் மகள்] ஸ்ரீ பூ தேவி அருகிலும்,ஸ்ரீ தேவி [ஸ்ரீ லட்சுமி] பெருமாளின் தலையருகேயும் அமர்ந்துள்ளனர்.கொப்பூள்க் கொடியிலிருந்து எழுந்த தாமரை
மலரில் நான்முகக் கடவுளாகிய பிரமன் அமர்ந்துள்ளார்.வானத்தில் தேவர்கள் இருப்பது  போன்ற புடைச் சிற்பங்கள் உள்ளன.கஜல்ட்சுமியின் திரு உருவம் செந்தாமரையில் அமர்ந்துள்ள எழில்மிகுத் தோற்றம் இனியதாகும்.இருபுறமும் யானைகளிரண்டு குடத்து நீரால் அம்மனுக்கு அபிசேகம் செய்யும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.  செந்தில் கோவிந்தர் சன்னிதிக்கு எதிரே கருடாழ்வார் பெருமாளைக் கும்பிட்டவாறு குத்துக் காலிட்டவாறு உள்ளார்.இவரையும் கண்டு பின்பு கிழக்கு நோக்கி வரவேண்டும் தொடர்ந்து தெற்கேத் திரும்பினால் செப்புக் கொடிமரத்தைக் காணலாம்.இக் கொடி மரத்தின் வழியே மூலவரான பால சுப்பிரமணியரைக் காணலாம்.இக் கொடிமரத்திற்கு கீழ்புறம் சுவற்றில் சிறிய துளை ஒன்று உள்ளது.இதில் காதை வைத்துக் கேட்டால் ஒம் என்ற சப்தம்கேட்கும்.கடலலைகள் என்னேரமும் முருகப் பெருமானை ஒம் என்னும் மந்திரச் சொற்களால் அர்ச்சனை செய்கின்றன.கொடி மரத்தின் முன் புறம் கம்பத்தடி வினாயகரின் சிறிய சன்னிதி உள்ளது. இவ்வாறு இரண்டாம் திருச்சுற்றை சண்முகரின் சன்னிதி வரை சென்று நிறைவு செய்யலாம். இரண்டாம் திருச்சுற்றின் தென் கிழக்கு மூலையில் பக்தர்கள் வெளியேறுவதற்கான வழியொன்று உள்ளது . இம்மூலையில் ஆயிரமாண்டுகள் பழைமை வாய்ந்த கல்வெட்டுகள் உள்ளன.
        கி.பி.875 இல் இரண்டாம் வரகுண பாண்டியன் முருகப்பெருமானின்  வழிபாட்டிற்காக 1400 பொற்காசுகளைவழங்கி அதன் வட்டியிலிருந்து வழிபாடு, திருவிழாக்களை நடத்தியதை அக்கல்வெட்டு கூறுகிறது.


Thiruchendur Temple Structure
Built about 300 years ago by Thesigamoorthy Swamigal of Thiruvaduthurai Adeenam, this Subrahmanya Swami Devasthanam is located near Vira Magendragiri Hills. Usually, the Raja Gopuram is seen in the eastern side of the temples in Tamilnadu. But in Arulmigu Subramaniaswamy Temple, Tiruchendur, it is seen in the western side. Western tower called as Mela Gopuram is 130 ft high and has nine storeys with nine Kalasams at the top of the Gopuram, representing the 9 tiers. The main entrance to the temple is facing south. The Shanmugha Vilasa Mandapam is in the front of the main temple.
Siddhi Vinayaga Peruman, 108 Mahadevars and Lord Ranganathar
A small temple for Lord Vinayaga called Tundugai Vinayagar Temple is located near the Murugan temple. It is the usual practice of the devotees to first worship this Vinayagar and then Lord Murugan. There are three prakarams (corridors which surround the sanctum sanctorum) in the temple. Siddhi Vinayaga Peruman Temple is found in the first prakaram. Moving towards west one can see 108 SivaLingas which are called 108 Mahadevars. There is also a shrine dedicated to the author of Tiruppugazh, Arunagirinathar. On turning to north, a tall sized Vallapa Vinayagar facing west is seen. Going to the north end, on the east is the Perumal Sannidhi. There is also a Santhanasala rock where devotees can worship Lord Ranganathar in a lying posture and Goddess Gajalakshmi (one of the 8 forms of Goddess Lakshmi) by his side. The copper Kodi Maram (Holy Flag mast) and Kalyana Vinayagar shrine are found at the southern side.
Second Prakaram 
Vira Marthandar and Virakesari idols are seen at the entrance of second prakaram on both sides. The Kumaravidanga Peruman deity faces east at the entrance. Moving towards the west is the Lord Dakshina Murti temple and southwest corner is the sannidhi of Goddess Valliammai. The divine bedroom called Palli arai is found in that sannidhi. The Yaga Salai Mandapam is next to it where Yaga Pujas are done during the Skanda Shasti Festival. Lord Balasubramanian, a replica of Lord Murugan of the sanctum sanctorum, is seen facing the Yaga Salai.
Goddess Deivanai Sannidhi
In the northwest corner there is a sannidhi for Goddess Deivanai. Other shrines found in this prakaram are Lord Sankara Narayanar, Lord Kasi Viswanathar, Vadhapuriswarar, Vedhapuriswarar, Ekambara Nathar, Mayuranathar who is facing north and Lord Chandeswarar facing south. There are also sannidhis for Lord Nataraja and Lord Baihravar. Lord Saneeswara is found facing south. Golden Kodi Maram is seen on the south.
Maha Mandabam
On coming to the inner chamber (Maha Mandabam), the statues of Parvathi Devi and Kariya Manickavinayagar are found facing east. Lord Virabahu and Vira Mahendrar are found at the entrance of sanctum sanctorum on both sides. It is said that after defeating the demon, Soorapadma, Lord Murugan worshipped the Pancha Lingas (Five Sivalingas) with flowers at this spot and looked at the Devas.
Lord Muruga is seen in this divine posture in the sanctum sanctorum. He is carved in black granite. The Pancha Lingas that Lord Muruga worshipped are seen behind him. On moving towards east is Lord Jayanti Nathar and the Shanmugar is seen facing south.


 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...