<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> வழிபாடு | Tiruchendhur | திருச்செந்தூர்

வழிபாடு


Temple Timings and Daily Poojas
Thiruchendur Murugan Temple is opened for pilgrims from 5:00 am to 12:00 pm and from 5.15 pm to 9.00 pm. Nine Kalams of pooja are performed daily to the deity.
Offerings
Devotees endure severe fast and take Kavadi, Palkudam and offer Abishekam to fulfill their vows. Besides, Golden Chariot procession, Chandana Labanam, Dharabhishegam and Dharahomam are also performed by the worshippers.
Temple Festivals
Thaipusam Festival, Vaikasi Visagam (May - June), Avani festival (August – September), Skanda Sasti Festival - 7 days (October - November) and Masi festival – 12 days (February – March) are the important festival celebrated at Thiruchendur Murugan Temple. Of these, Skanda Sashti is celebrated in a large scale with a unique ritual called Soorasamharam.


திருச்செந்தூரில் மாத பூஜையும் -பலன்களும்

-------------------------------------------
தை
   தை மாதம் அகில் தூபமிட்டு வழிபட்டால் சிவ தரிசனம்
காணலாம்.அனைத்து சங்கராந்திகளிலும் முகாரம்ப தீர்த்தத்திலும் ,கந்த புஷ்கரணி தீர்த்தத்திலும் நீராடி விட்டு சிறு பயறு கலந்த செந்நெல் அரிசிச் சோற்றை முருகனுக்குப் படைத்து வழிபட்டால் நூறு யாகம் செய்த பயனடையலாம்.
மாசி 
   மாசி மாதம் வதனாரம்பத்தீர்த்தத்தில் நீராடி செந்திலாண்டவரை வழிபட்டால் இப்பிறவி கடைசியாகும்.
பங்குனி
   பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அமரபட்சத்து நவமி திதிகளில் கடலில் நீராடி கந்தனை வழிபட்டால் எல்லா பாவங்களும் அகலும்.
சித்திரை
   சித்திரை மாதம் முகாரம்பத் தீர்த்தத்தில் குளித்து
பூரணச் சந்திரன் காலத்திலும்,உத்திர, தட்சிணாயக் காலங்களிலும் வேலவனைத் தொழுது நின்றால் முருகனருளை உடனே பெறலாம்.
வைகாசி
    வைகாசி மாதம் சுக்கிலபட்சம் மூன்றாம் திதியிலும் விசாக நட்சத்திரத்தின் போதும் வள்ளிமணாளனை திருச்செந்தூரில் வழிபட்டால் துக்கங்கள் அகலும்,நோயற்ற
வாழ்வு பெறலாம்.
ஆனி
    ஆனி மாதத்தில் பூரணச் சந்திரன் காலத்திலும் கிருத்திகை நாளிலும் வழிபட்டால் தொலையாத பாவங்கள் தொலைந்து போகும்.
ஆடி
    எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் பசுந்தயிர் கலந்த சோற்றை ஜெயந்தினாதருக்குப் படைத்து வழிபட்டால்
முருகனுடைய பாதங்களை அடையலாம்.
ஆவணி
    ஆவணி மாதம் ஒவ்வொரு நாளும் வழிபடுவோர் நூறு
யாகம் செய்த நற்பயனைப் பெறுவர்.
புரட்டாசி
    புரட்டாசி மாதம் திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்க்குத் திதி கொடுத்தால் முன்னோர்கள் தேவருலகை அடைவார்கள்.
அய்ப்பசி
    இம்மாதம் உத்திர தட்சிணாயக் காலங்களில் கந்தபுஷ்கரணியில் நீராடி வழிபட்டால் மறு பிறவி கிடையாது.
கார்த்திகை
    கார்த்திகை மாதம் முப்பது நாளும் பசு நெய்யில்தீபமிட்டால் முருகனின் பாதத்தை அடைவர்.கார்த்திகைநட்சத்திரத்தன்று நெல்லி இலையால் முருகனை அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம்.
மார்கழி
   மார்கழி மாதம் அமர பட்சத்து சப்தமி,நவமி திதிகளில்அர்ச்சனை செய்து வழிபட்டால் முருகனின் மாமாவான மாயவனின் அருளைப் பெறலாம்.
  
   தினமும் நடைபெறும் பூஜைகள் விபரம்

   --------------------------------------
05.00 காலை கோயில் நடை திறத்தல்
05.10 காலை சுப்பிரபாதம் [திருப்பள்ளி எழுச்சி]
05.30 காலை விசுவ ரூப தரிசனம்
05.45 காலை கொடிமர வணக்கம்
06.15 காலை உதய மார்த்தாண்ட அபிசேகம்
07.00 காலை உதய மார்த்தாண்ட தீபாராதனை
08.00 காலை கால சாந்தி தீபாராதனை
10.00 காலை கலச பூஜை
10.30 காலை உச்சி கால அபிசேகம்தீபாராதனை
12.00 பகல் உச்சி கால தீபாராதனை
05.00 மாலை முதல்
05.30 மாலை வரை சாயரட்சை தீபாராதனை
07.15 இரவு அர்த்த சாம அபிசேகம்
07.45 இரவு ராக்கால தீபாராதனை
08.00 இரவு ஏகாந்தம் போற்றி அர்ச்சனை
08.15 இரவு அர்த்த ஜாம பூஜை
08.30 இரவு ஏகாந்தம் சேவை
08.45 இரவு பள்ளியறை தீபாராதனை
09.00 இரவு நடை திருக்காப்பிடுதல்

வருடாந்திர சிறப்புப் பூஜை விபரம்
--------------------------------
1. சித்திரை வருடப்பிறப்பு 05.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.15
2. மாதாந்திர வெள்ளி தோறும் 4.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00
3. வைகாசி விசாகம் வருடப்பிறப்பு 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.00
4. வைகாசி விசாகம் மறுநாள் 04.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00
5. ஆவணித் திருவிழா 1 ஆம்திருநாள் 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
6. ஆவணித் திருவிழா 2 ஆம்திருநாள் 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
7. ஆவணித் திருவிழா 7 ஆம்திருநாள் 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
8. அய்ப்பசி விசு 05.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 06.00
9. தீபாவளித் திருநாள் 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
10.கந்தசஷ்டி 1 ஆம் திருநாள் 02.00

  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
11.கந்தசஷ்டி 2 ஆம் திருநாள்3.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
12.கந்தசஷ்டி 3 ஆம் திருநாள் 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00        
13.கந்தசஷ்டி 4 ஆம் திருநாள் 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
14.கந்தசஷ்டி 5 ஆம் திருநாள் 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
15.கந்தசஷ்டி 6 ஆம் திருநாள் 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம்02.00
16.கந்தசஷ்டி திருக்கல்யாணம் 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
17.கார்த்திகை மாதப்பிறப்பு 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.15
18.மார்கழி 1 ஆம் தேதி முதல்-30 வரை 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00

19.தை 1 ஆம் தேதி 03.00
    உதயமார்த்தாண்ட அபிசேகம்04.00

20.ஜனவரி 1 ஆம் 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
21.தைப் பொங்கல் 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
22.காணும் பொங்கல் 04.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.15
23.தைப் பூசம் 02.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 3.15
24.தைப்பூசம் முன்தினம் 04.00
 உதயமார்த்தாண்ட அபிசேகம் 05.00
25.மாசித்திருவிழா 1 ஆம் திருநாள் 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
26.மாசித்திருவிழா 2 ஆம் திருநாள் 03.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 04.00
27.மாசித்திருவிழா 7 ஆம் திருநாள் 01.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 02.00
28.பங்குனி உத்திரம் 04.00
  உதயமார்த்தாண்ட அபிசேகம் 5.00

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...