<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> நேர்த்திக்கடன்கள் | Tiruchendhur | திருச்செந்தூர்

நேர்த்திக்கடன்கள்

செந்தூர் முருகனுக்கு நேர்த்திக்கடன்கள்
திருச்செந்தூர் முருகனுக்கு நேர்த்திகடன்கள் செலுத்துவதை வாழ்க்கையின்
பெரும் பேறாக மக்கள் கருதுகின்றனர்.முடியெடுத்தல்,காது குத்துதல்,
பால்குடம் எடுத்தல்,காவடி எடுத்தல்,தங்கத்தேர் இழுத்தல், உண்டியலில்
பணம் போடுதல்,தங்க நகைகளைப் போடுதல்,வேல் செய்து உண்டியலில்
போடுதல், விளைபொருட்களைக் கொண்டு வந்து வைத்தல், ஆடு,மாடுகளை
நேர்த்திக்கடனாக விடுதல்,துலாபாரம் செலுத்துதல்,அர்ச்சனை செய்தல்,
விளக்குக்கு நெய்கொடுத்தல்,அபிசேகம் செய்தல்,பூமாலைக் கொடுத்து
அலங்காரம் செய்தல்,மாவிளக்கு வைத்தல்,அன்னதானம் செய்தல் என
பக்தியால்செய்யப்படுகின்றன.முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும்
முருகனின் அருளிருந்தால் மட்டுமே நினைத்தபடி கைகூடி வரும்.இவற்றுள்
காவடி எடுத்தல் என்ற நேர்த்திக்கடன் முருகனுக்கு மிகவும் விருப்பமானதாகும்.
காவடி
குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள் பிரச்சனைகள் ஆகியவற்றிற்குத் தீர்வு
காண்பதற்கும், நோய்களிலிருந்து விடுபடவும்,தோசங்களிலிருந்து விடுபடவும் முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்று நேர்த்திகடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்வார்கள்.தங்களுடைய தோளில் எடுத்துச் சென்று சமர்ப்பிப்பது காவடி ஆகும்.இக்காவடியில் எடுத்துச் செல்லும் நேர்த்திப் பொருட்களின் அடிப்படையில்அதனுடைய பெயர்அழைக்கப்படும்.
பால்க்காவடி,பன்னீர்காவடி,இளநீர்காவடி,சர்க்கரைக்காவடி,எண்ணெய்காவடி,
மச்சக்காவடி,சர்ப்பக்காவடி,அலகுக்காவடி,அக்கினிக்காவடி,பறக்கும்காவடி,
ரதக்காவடி முதலியன பக்தர்களால் அதிகம் விரும்பி எடுக்கப்படும்
காவடிகளாக உள்ளன,

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...