<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூர் கோயில் அன்பு இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயில் அன்பு இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகத்திலுள்ள அன்பு இல்லத்தில் ஆதரவற்ற ஏராளமான குழந்தைகள் தங்கி 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.இவர்களுக்கான உணவு,உடைகள்,கல்விக்கான அனைத்துச் செலவினங்களையும் கோயில் நிர்வாகமே செய்துவருகிறது.இந்நிலையில் இம்மாணவர்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் இயந்திரத்தை ராஜபாளையம் சத்திரப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி பண்ணையார் 2.20 லட்சம் மதிப்பிலானதை வழங்கியுள்ளார்.இதனை கோயில் இணை ஆணையர் அர.சுதர்சன் தலைமையில் தக்கார் கோட்டை மணிகண்டன் இயக்கி வைத்தார். 

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...