<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> August 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.95 லட்சத்தை தாண்டியது


திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ 95
லட்சத்தை தாண்டியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை
உண்டியல் திறந்து எண்ணப்படும். இதேபோன்று ஆகஸ்டு மாதம் உண்டியல் காணிக்கை
எண்ணப்பட்டு உள்ளது. அதன்படி முதல் உண்டியல் திறப்பு கடந்த 14ந் தேதி
திறந்து எண்ணப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார்
திருமண மண்டபத்தில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், இணைஆணையர் சுதர்சன்,
முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்த பணியில் தூத்துக்குடி
அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா,
ஆய்வர் முருகானந்தம், தலைமை க ணக்கர் பட்டுராஜா, பொதுமக்கள் பிரதிநிதிக ள்
சுப்பிரமணியன், வேலாண்டி, அகிலன், மோகன், மற்றும் பணியாளர்கள் உண்டியல்
எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

முதல் உண்டியலில் ரூ. 49 லட்சத்து 31
ஆயிரத்து 634 இருந்தது. 505 கிராம் தங்கமும், 3,320 கிராம் வெள்ளியும்
இருந்தது. 2-வது முறையாக திறந்து எண்ணப்பட்ட கோவில் உண்டியலில் 40 லட்சத்து
68 ஆயிரத்து 831 ரூபாயும், கோசாலை உண்டியலில் 35 ஆயிரத்து 907 ரூபாயும்,
யானை பராமரிப்பு 8 ஆயிரத்து 934 ரூபாயும், அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 9
ஆயிரத்து 891 ரூபாயும், மேலக்கொவில் அன்னதான உண்டியலில் 2 ஆயிரத்து 557
ரூபாயும், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் 3 ஆயிரத்து 233 ரூபாய் கிடந்து
இருந்தது. தங்கம் 381 கிராமும், வெள்ளி 3,308 கிராம் கிடைத்து
உள்ளது.மொத்தம் 95 லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாயும், 886 கிராம்
தங்கமும், 6 ஆயிரத்து 628 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உண்டியல் வசூல் ரூ. 53 லட்சத்து 81
ஆயிரத்து 938 கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத உண்டியல் வசூல் 95
லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாய் கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு
மாத உண்டியல் வசூலை விட ரூ 41 லட்சத்து 79 ஆயிரத்து 49 அதிகம் கிடைத்து
உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா: செப்டம்பர் 5-ல் கொடியேற்றம்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா, செப்டம்பர் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 முக்கிய திருநாளான 5-ம் திருவிழா செப். 9-ம் தேதியும், 7-ம் திருநாளான சிவப்பு சாத்தி திருவிழா செப். 11-ம் தேதியும், 8-ம் திருநாளான பச்சை சாத்தி திருவிழா செப்.12-ம் தேதியும், சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டத் திருவிழா செப்.14-ம் தேதி நடைபெறுகிறது.

திருசெந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.49 லட்சம் செலவில் கிரிப்பிரகாரத்தின் கீழ்ப்பகுதியில் கடற்கரை ஓரம் பக்தர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து கடல் அழகை ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். குழந்தைகளின் பாதுகாப்புக்காக இங்கு கடற்கரையோரம் அமரும் இடத்தில் தடுப்புக்காக கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து ரசிக்கலாம். மேலும் மின்விளக்குகள், அலங்கார நடைபாதை ஆகியவையுடன் இந்த இடம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ள இந்த இடம் பக்தர்களுக்கு மிகவும் வசதியாகவும் இருக்கிறது. ரூ.99 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் கூடம் விரைவில் கட்டப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளது. ரூ.53 லட்சம் செலவில் சுற்றுலா பஸ் ஸ்டாப் அருகே பக்தர்கள் பயன்பாட்டுக்காக 24 அறைகள் கட்டப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் செலவில் நவீன முடிகாணிக்கை கூடம் கட்டப்பட்டு உள்ளது. கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை மாத த்தை விட இந்த ஆண்டு ஜூ லை மாதம் உண்டியல் வருமானம் ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்து 700ம், விடுதி கட்டணம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 758ம், கட்டண சீட்டுகள் மூலம் ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்து 20ம் அதிகரித்து உள்ளது. மொத்தம் ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்து 478ம் வருவாய் அதிகரித்து இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலு க்கு நாளுக்கு நாள் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இரு க்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வசதிகளும் தொடர்ந்து செய்யப்பட் டு வருகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் கூ றினார். கோயில் இணை ஆ ணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.

சைவம் வளர்த்தச் சான்றோர்கள்

ஸ்ரீ அப்பர் சுவாமிகள்-திருஞான சம்பந்தர்
ஸ்ரீ அருணகிரிநாதர்

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...