<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> February 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

தைப்பூசத்திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பாதயாத்திரைப் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்




திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரைப் பக்தர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.கலியுகத்தின் கன்கண்ட தெய்வமாகத் திகழும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், முருகனின் பிறவியின் நோக்கமான சூரனின் வதம் நிறைவேறிய இடமான அலைவாய் திருச்செந்தூருக்கு வந்தால் வேண்டியனவெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்கள் தெரிந்ததால், தங்களை வருத்தி பாதயாத்திரையாக வரும் நேர்த்திக்கடனைச் செலுத்துவதை பக்தர்கள் விரும்புகின்றனர்.திருமணம் விரைவில் நடப்பதற்காகவும்,வேலை கிடைப்பதற்காகவும்,நோய்கள் நீங்கி நலமான வாழ்க்கை வாழ்வதற்காகவும்,குழந்தைபாக்கியம் கிடைப்பதற்காகவும் முருகா...முருகா...என்று மனமுருகி வேண்டி வருகின்றனர். பால்குடம், காவடி, அலகு குத்தி வருதல் என்று விதம் விதமாக பக்தர்கள் செந்தூர் நோக்கி வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.தைப் பூசத்தை ஒட்டி நாளை அதிகாலை 3.00 மணிக்கு கோயிலின் கதவு நடை திறக்கப்படுகிறது.3.30 மணிக்கு விசுவரூபதரிசனம்,4.00 மணீக்கு உதயமார்த்தாண்ட அபிசேக பூஜை,காலை7.00 மணிக்கு சுவாமி அஸ்திரத்தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும்,மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு 10.15 மணீக்கு உச்சி கால அபிசேகமும்,பகல் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனையும் நடைபெறும்.சுவாமி அலைவாயுகந்தபெருமாள் கோயிலில் இருந்து வெளியே எழுந்தருளுகின்றார்.இரவு 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலாவந்து பக்தர்களுக்குக் அற்புதக் காட்சி அளிக்கிறார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைகளுக்குப் புல்வெளி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைகளுக்குப் புல்வெளி
தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு இயற்கைச் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனையின்படி திருச்செந்தூரில் உள்ள கோயில் யானைகள் இயற்கைச் சூழலுடனிருக்க
யானைகளின் அறைகளுக்குப் பின்னாலுள்ள இடத்தில் புல் வளர்ப்பதற்கான வேலை தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டனால் தொடங்கப்பட்டது.கோயில் இணை ஆணையர் அர.சுதர்சன் முன்னிலை வகித்தார்.மானிலஇளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் பி.ஆர்.மனோகரன், யூனியன் தலைவர் ஹேமலதா லிங்ககுமார்,துணைத்தலைவர் சண்முகசுந்தரம்,பஞ்சாயத்துத் தலைவர் சுரேஷ்பாபு,ஒன்றியச் செயலாளர்
எம்.ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...