<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> Tiruchendhur | திருச்செந்தூர்: தர்ம சாஸ்திரம்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

Showing posts with label தர்ம சாஸ்திரம். Show all posts
Showing posts with label தர்ம சாஸ்திரம். Show all posts

கோயிலில் செய்ய வேண்டியது


[1] திருக்கோயிலில் ஸ்வாமிக்கு அபிசேகம் செய்யும் நேரத்தில் பிரதட்சணம் [வலம் வருதல்] கூடாது.
[2] கோயிலை ஒரு தடவை மட்டும் பிரதட்சணம் செய்யக் கூடாது.குறைந்தது மூன்று முறையாவது சுற்றி வர வேண்டும்.
[3] திருக்கோயில் மூடியிருக்கும் நேரத்திலும்,திருவிழாவில் சுவாமி வீதி உலாவரும் நேரத்திலும்,உள்ளே திரை போட்டிருக்கும் நேரத்திலும் கோயிலில் உள்ள தெய்வத்தைத் தரிசனம் செய்வதோ, பிரதட்சணம் வருதலோ கூடாது.
[4] கோயில்களில் திருவிழா நடக்கும் போது [கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை]அதன் சுற்றுப்புறங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.
[5] ஒரு ஆலயத்தில் இருந்து கொண்டு மற்ற ஆலயத்தைப் புகழ்ந்து பேசக்கூடாது.

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...