<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> October 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா திங்கள்கிழமை (அக். 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்தத்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.காலை ஐந்து மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா வருகிறது. ஆறு மணிக்கு சந்தையடியூர் முத்தாரம்மன் தசரா குழு சார்பில்கடற்கரை செல்லும் வழியில் அன்னதானம் நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு கொடியேற்றமும்நடைபெறுகின்றனபத்து மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம்நடைபெறுகிறது. பகல் 1 மணி, மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கியத் திருவிழாவான மகிஷாசூரசம்ஹாரம இம்மாதம் 24-ம் தேதி நடைபெறுகிறது.தசரா திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் தக்காரும், உதவி ஆணையருமான செல்லத்துரை, இணை ஆணையர் அன்புமணி, நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் கோவில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


திருச்செந்தூர் கோயிலிலுள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு பாதுகாக்கப்படவும்,கோயிலில் உடைந்துள்ள துவாரபாலகர் சிலையைச் சரி செய்திடவும்மாண்புமிகு முதலமைச்சருக்குக் கோரிக்கை



தமிழகத் தொல்லியல் கழகத்தின் உறுப்பினரும்,காந்திஜி நுகர்வோர் பேரவையின் நிறுவனருமான முனைவர் த.த.தவசிமுத்து மாண்புமிகு முதலமைச்சர்,டாக்டர்.அம்மா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
                  [1]தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கோயிலினுள் உள்பிரகாரம் உள்துறைஅலுவலகத்தையை ஒட்டி, சிற்பவிதிகளுக்கு மாறாக வலது கைஉடைந்துகாணப்படும் துவாரபாலகரானவீரகேசரியின் சிற்பத்தைப் புதுப்பித்திட உடனடியாக ஆணையிட வேண்டுகிறேன். ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோயிலின் உண்டியல் வருமானத்தை மட்டும் பெருமையாக நாளிதழில் வெளியிடும் கோயில் நிர்வாகம் கோயிலின் முக்கியமான 
கற்சிற்பம் உடைந்தது பற்றி கவலை கொள்ளாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தன்னைக்காண வரும் பக்தர்களை,உள்ளே காக்க வல்ல முருகன் உள்ளே இருக்கிறான் என்று சுட்டிக்காட்டும் கை உடைந்துள்ளது. அம்மா,அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோயிலின் ஆகமத்தை நிலை நிறுத்திட வேண்டுகிறேன்.
      [2]கோயிலின் தென்கிழக்கு மூலையில் நட்டுவைக்கப்பட்டு இருக்கும் கி.பி.875 ஆம்ஆண்டினைச்சேர்ந்த இரண்டாம் வரகுணப்பாண்டியனுடைய மிக அரியதான வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.தமிழகத்தில் வட்டெழுத்துக்கல்வெட்டுகள் மிகக் குறைவாகவே உள்ளன.இந்நிலையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மீது தேவையற்றப் பலகைகள், இரும்புச்சட்டங்கள்,கனமானப் பொருட்கள் பணியாளர்களால் வீசப்பட்டு கல்வெட்டின் மேற்பகுதி மற்றும் வட்டெழுத்துக்கள் சிதையத்தொடங்கி விட்டன.
இதுகுறித்து பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்குக்கொண்டு சென்றும் பயனில்லை.தினமணி நாளிதழில்ஆராய்ச்சிமணிப் பகுதியில் எழுதியும் பயனில்லை.எனவே,
      அம்மா,அவர்கள் இவ்வட்டெழுத்துக்கல்வெட்டை கண்ணாடி போட்டுப் பாதுகாத்திட ஆணையிட வேண்டுகிறேன் என்று கோரியுள்ளார்.                                                    

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...