<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> Tiruchendhur | திருச்செந்தூர்: திருச்செந்தூர் செய்திகள்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

Showing posts with label திருச்செந்தூர் செய்திகள். Show all posts
Showing posts with label திருச்செந்தூர் செய்திகள். Show all posts

ஆவணி திருவிழா தேரோட்டம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா கடந்த 22–ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10–ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அதிகாலை 5.55 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 4 ரத வீதிகளின் வழியாக அம்மன் தேர் சென்று, மீண்டும் கோவில் நிலையை சேர்ந்தது.

திரளான பக்தர்கள்

விழாவில் கோவில் இணை ஆணையர் தா.வரதராஜன், அலுவலக கண்காணிப்பாளர் கு.கோமதி, இளநிலை பொறியாளர் சந்தான கிருஷ்ணன், அலுவலர்கள் வெங்கடேசன், சிவா, சிவன் கோவில் மணியம் தமிழரசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 

காவடி கட்டும் நிகழ்ச்சி-குமரி மாவட்டம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவடி கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவடி கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா திங்கள்கிழமை (அக். 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்தத்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.காலை ஐந்து மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா வருகிறது. ஆறு மணிக்கு சந்தையடியூர் முத்தாரம்மன் தசரா குழு சார்பில்கடற்கரை செல்லும் வழியில் அன்னதானம் நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு கொடியேற்றமும்நடைபெறுகின்றனபத்து மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம்நடைபெறுகிறது. பகல் 1 மணி, மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கியத் திருவிழாவான மகிஷாசூரசம்ஹாரம இம்மாதம் 24-ம் தேதி நடைபெறுகிறது.தசரா திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் தக்காரும், உதவி ஆணையருமான செல்லத்துரை, இணை ஆணையர் அன்புமணி, நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் கோவில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


திருச்செந்தூர் கோயிலிலுள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு பாதுகாக்கப்படவும்,கோயிலில் உடைந்துள்ள துவாரபாலகர் சிலையைச் சரி செய்திடவும்மாண்புமிகு முதலமைச்சருக்குக் கோரிக்கை



தமிழகத் தொல்லியல் கழகத்தின் உறுப்பினரும்,காந்திஜி நுகர்வோர் பேரவையின் நிறுவனருமான முனைவர் த.த.தவசிமுத்து மாண்புமிகு முதலமைச்சர்,டாக்டர்.அம்மா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
                  [1]தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கோயிலினுள் உள்பிரகாரம் உள்துறைஅலுவலகத்தையை ஒட்டி, சிற்பவிதிகளுக்கு மாறாக வலது கைஉடைந்துகாணப்படும் துவாரபாலகரானவீரகேசரியின் சிற்பத்தைப் புதுப்பித்திட உடனடியாக ஆணையிட வேண்டுகிறேன். ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோயிலின் உண்டியல் வருமானத்தை மட்டும் பெருமையாக நாளிதழில் வெளியிடும் கோயில் நிர்வாகம் கோயிலின் முக்கியமான 
கற்சிற்பம் உடைந்தது பற்றி கவலை கொள்ளாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தன்னைக்காண வரும் பக்தர்களை,உள்ளே காக்க வல்ல முருகன் உள்ளே இருக்கிறான் என்று சுட்டிக்காட்டும் கை உடைந்துள்ளது. அம்மா,அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோயிலின் ஆகமத்தை நிலை நிறுத்திட வேண்டுகிறேன்.
      [2]கோயிலின் தென்கிழக்கு மூலையில் நட்டுவைக்கப்பட்டு இருக்கும் கி.பி.875 ஆம்ஆண்டினைச்சேர்ந்த இரண்டாம் வரகுணப்பாண்டியனுடைய மிக அரியதான வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.தமிழகத்தில் வட்டெழுத்துக்கல்வெட்டுகள் மிகக் குறைவாகவே உள்ளன.இந்நிலையில் இக்கோயிலில் உள்ள கல்வெட்டு மீது தேவையற்றப் பலகைகள், இரும்புச்சட்டங்கள்,கனமானப் பொருட்கள் பணியாளர்களால் வீசப்பட்டு கல்வெட்டின் மேற்பகுதி மற்றும் வட்டெழுத்துக்கள் சிதையத்தொடங்கி விட்டன.
இதுகுறித்து பலமுறை நிர்வாகத்தின் கவனத்திற்குக்கொண்டு சென்றும் பயனில்லை.தினமணி நாளிதழில்ஆராய்ச்சிமணிப் பகுதியில் எழுதியும் பயனில்லை.எனவே,
      அம்மா,அவர்கள் இவ்வட்டெழுத்துக்கல்வெட்டை கண்ணாடி போட்டுப் பாதுகாத்திட ஆணையிட வேண்டுகிறேன் என்று கோரியுள்ளார்.                                                    

செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.95 லட்சத்தை தாண்டியது


திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ 95
லட்சத்தை தாண்டியது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாதம் இருமுறை
உண்டியல் திறந்து எண்ணப்படும். இதேபோன்று ஆகஸ்டு மாதம் உண்டியல் காணிக்கை
எண்ணப்பட்டு உள்ளது. அதன்படி முதல் உண்டியல் திறப்பு கடந்த 14ந் தேதி
திறந்து எண்ணப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார்
திருமண மண்டபத்தில் தக்கார் ப.தா.கோட்டைமணிகண்டன், இணைஆணையர் சுதர்சன்,
முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்த பணியில் தூத்துக்குடி
அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்லத்துரை, அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா,
ஆய்வர் முருகானந்தம், தலைமை க ணக்கர் பட்டுராஜா, பொதுமக்கள் பிரதிநிதிக ள்
சுப்பிரமணியன், வேலாண்டி, அகிலன், மோகன், மற்றும் பணியாளர்கள் உண்டியல்
எண்ணும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

முதல் உண்டியலில் ரூ. 49 லட்சத்து 31
ஆயிரத்து 634 இருந்தது. 505 கிராம் தங்கமும், 3,320 கிராம் வெள்ளியும்
இருந்தது. 2-வது முறையாக திறந்து எண்ணப்பட்ட கோவில் உண்டியலில் 40 லட்சத்து
68 ஆயிரத்து 831 ரூபாயும், கோசாலை உண்டியலில் 35 ஆயிரத்து 907 ரூபாயும்,
யானை பராமரிப்பு 8 ஆயிரத்து 934 ரூபாயும், அன்னதான உண்டியலில் 5 லட்சத்து 9
ஆயிரத்து 891 ரூபாயும், மேலக்கொவில் அன்னதான உண்டியலில் 2 ஆயிரத்து 557
ரூபாயும், கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் 3 ஆயிரத்து 233 ரூபாய் கிடந்து
இருந்தது. தங்கம் 381 கிராமும், வெள்ளி 3,308 கிராம் கிடைத்து
உள்ளது.மொத்தம் 95 லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாயும், 886 கிராம்
தங்கமும், 6 ஆயிரத்து 628 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உண்டியல் வசூல் ரூ. 53 லட்சத்து 81
ஆயிரத்து 938 கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டு மாத உண்டியல் வசூல் 95
லட்சத்து 60 ஆயிரத்து 987 ரூபாய் கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு
மாத உண்டியல் வசூலை விட ரூ 41 லட்சத்து 79 ஆயிரத்து 49 அதிகம் கிடைத்து
உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா: செப்டம்பர் 5-ல் கொடியேற்றம்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித் திருவிழா, செப்டம்பர் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா இந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 முக்கிய திருநாளான 5-ம் திருவிழா செப். 9-ம் தேதியும், 7-ம் திருநாளான சிவப்பு சாத்தி திருவிழா செப். 11-ம் தேதியும், 8-ம் திருநாளான பச்சை சாத்தி திருவிழா செப்.12-ம் தேதியும், சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டத் திருவிழா செப்.14-ம் தேதி நடைபெறுகிறது.

திருசெந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.49 லட்சம் செலவில் கிரிப்பிரகாரத்தின் கீழ்ப்பகுதியில் கடற்கரை ஓரம் பக்தர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து கடல் அழகை ரசிப்பதற்கு நன்றாக இருக்கும். குழந்தைகளின் பாதுகாப்புக்காக இங்கு கடற்கரையோரம் அமரும் இடத்தில் தடுப்புக்காக கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து ரசிக்கலாம். மேலும் மின்விளக்குகள், அலங்கார நடைபாதை ஆகியவையுடன் இந்த இடம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ள இந்த இடம் பக்தர்களுக்கு மிகவும் வசதியாகவும் இருக்கிறது. ரூ.99 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் கூடம் விரைவில் கட்டப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கி உள்ளது. ரூ.53 லட்சம் செலவில் சுற்றுலா பஸ் ஸ்டாப் அருகே பக்தர்கள் பயன்பாட்டுக்காக 24 அறைகள் கட்டப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் செலவில் நவீன முடிகாணிக்கை கூடம் கட்டப்பட்டு உள்ளது. கோயிலில் கடந்த ஆண்டு ஜூலை மாத த்தை விட இந்த ஆண்டு ஜூ லை மாதம் உண்டியல் வருமானம் ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்து 700ம், விடுதி கட்டணம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 758ம், கட்டண சீட்டுகள் மூலம் ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்து 20ம் அதிகரித்து உள்ளது. மொத்தம் ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்து 478ம் வருவாய் அதிகரித்து இருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலு க்கு நாளுக்கு நாள் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இரு க்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வசதிகளும் தொடர்ந்து செய்யப்பட் டு வருகிறது.கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிமுறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் கூ றினார். கோயில் இணை ஆ ணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமøந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் நாளை ஆடி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யாவின் பவனி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.தொடர்ந்து மாலை 6 மணிக்க புஷ்ப வாகனத்தில் அய்யா பவனிவருகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு தர்மன் இனிமம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 8 மணிக்கு பால் அன்னதர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை மதியம் 2 மணிக்கு அன்னதர்மம், 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை5 மணிக்கு உகப்படிப்பு,பணிவிடை, இரவு 8 மணிக்கு தர்மம், இனிமம் வழங்கப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்பவாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் பவனிவந்து பக்தர்களுக்கு காட்சிகொடுக்கிறார். 11ம் திருவிழாவான30ம் தேதி காலை 6மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது. 8மணிக்கு பால் அன்னதர்மம் வழங்கப்படுகிறது. 10 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யாவின் பவனிநடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 1 மணிக்கு புஷ்பவாகனத்தில் அய்யாவின் பவனிவருதல் நிகழ்ச்சியும்,2 மணிக்கு தர்மம் இனிமம் வழங்கபடும்.ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் தர்மர், பொருளாளர் ராமையா, உதவிதலைவர் தங்கத்துரை, உதவிசெயலாளர் ராமசந்திரன் மற்றும் நிர்வாக குழுஉறுப்பினர்கள் செய்துவருகின்றனர்..

திருச்செந்தூரில் தீர்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி, நேற்று திருச்செந்தூர் முருகன்

கோயிலில், சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடிய தீர்த்தவாரி நிகழ்ச்சி

நடந்தது. இங்குள்ள, கடற்கரையில் ஏராளமானோர் தங்களது மூதாதையர்கள் நினைவாக

தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதுபோல, ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி

கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி

தரிசனம் செய்தனர்.

குலசை காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா



குலசேகரன்பட்டணம் காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா
நடந்தது. குலசேகரன்பட்டணம் வடக்கூர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள
காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழாவையொட்டி காலை 11 மணிக்கு
நெல்லை திரு உருமாலை பன்னிரு திருமறை வழிபாட்டு குழு சார்பில் காரைக்கால்
அம்மையார் பதியம் முழுவதும் பாடப்பட்டது. நண்பகல் 1 மணிக்கு மகேஸ்வர
பூஜையும் தொடர்ந்து நாட்டில் நல்ல மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டி
திருஞானசம்பந்தரின் மழை பதிகம் பாடினர்.பின்னர் பேராசிரியர் காளியப்பன்,
புலவர் அகதீஸ்வரன் ஆகியோரின் சமய சொற்பொழிவும் மாலை 5 மணிக்கு மாங்கனி பூஜை
நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதமாக மாங்கனியை இல்லங்குடி,
சண்முகம் ஆகியோர் வழங்கினர்.

திருச்செந்தூரில் தங்க அங்கி அணிவித்து மூலவரை வழிபடும் முறை மீண்டும் அமல்


திருச்செந்தூர் கோயிலில், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து, வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படஉள்ளது. இக்கோயிலில் குறிப்பிட்ட நாட்களிலும், பக்தர்கள் கட்டணம் செலுத்தும்போதும் மூலவர் சுப்பிரமணியர், உற்சவர் சண்முகர், பரிவார தெய்வங்களுக்கு தங்க அங்கி, வைரவேல், அணிகலன்கள் அணிவிக்கப்படும் முறை இருந்தது. ஆனால், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை, கடந்த தி.மு.க., ஆட்சியில் திடீரென ரத்து செய்யப்பட்டது. அந்த முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் ஜெ., உத்தரவுப்படி, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. நேற்று, இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் இதை தெரிவித்தார்.

2011-சுதந்திரதினவிழா ஓவியப்போட்டி-பரிசளிப்பு

மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்குப் பரிசுகளை பழக்கடை திருப்பதி வழங்கினார்.தியாகி பொன்னையாப்பிள்ளை,டாக்டர் தவசிமுத்து,பெ.அசோகன்,ஞானசீலன் ஆகியோர் உள்ளனர்

திருச்செந்தூரில் பால்குட விழா


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது
திரிசுதந்திரர்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம், காவடி
எடுத்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது
திரிசுதந்திரர்கள் சார்பில் 33வது ஆண்டு பால்குட வழிபாட்டு விழா நடந்தது.
இதை முன்னிட்டு சிவன்கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும்
அலகு குத்தினர். நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர்
சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் பால்குட
நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாலையில் கோயில் கடற்கரையில் ஏராளமான
பக்தர்கள் பூக்குழி இறங்கியும், வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை
பொதுதிரிசுதந்திரர்கள் சபையினர் செய்திருந்தனர்.

கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள் கருவூலத்தில் ஒப்படைப்பு


திருச்செந்தூர்:திருச்செந்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட செம்பு நாணயங்கள்
அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.திருச்செந்தூர் அருகேகுடியிருப்பு
விளை கிராமத்தில் 387 கிராம் செம்பு நாணய புதையல் கிடைத்தது. இது தொடர்பாக
தூத்துக்குடி மாவட்ட அரசிதழில் கடந்த 8.6.2012 அன்று வெளியிடப்பட்ட
அறிக்கையில் இந்த புதைபொருட்களை உரிமை கோரும் எவரும் தக்க ஆதாரங்களுடன்
நேற்று முன்தினம் (15ம் தேதி) காலை திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம்
முன்னிலையில் நேரிலோ அல்லது அதிகாரம் பெற்ற முகவர் மூலமாகவோ தக்க
ஆதாரங்களுடன் ஆஜராகி தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த செம்பு நாணயங்களுக்கு யாரும் உரிமை
கோரவில்லை.மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம், நேற்று
இந்த செம்பு நாணயங்களை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தொட்டில் அமைக்கப்படும்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற தங்கதொட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும், கோயில் உண்டியல் வருமானம் 0.25 கோடி அதிகரித்து உள்ளதாகவும் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்தார். 

இது குறித்து திருச்செந்தூர் முருகன்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் திருச்செந்தூர் முருகன் கோயில் வரும் பக்தர்களின் அடிப்படை வசதிக்காக நடைபாதையுடன் கூடிய சுற்றுலா பஸ்ஸ்டாண்ட், உயர் கோபுர மின்விளக்குகள், கழிப்பறைகள் ஆகியவை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூ. 9 லட்சம் செலவில் உபயதாரர்கள் மூலம் கோயில் மூலஸ்தானத்தின் வாயிற்கதவுகள் தங்க முலாம் பூசப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் பயன்பாட்டிற்காக பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் குழந்தை இல்லாதவர்கள் வேண்டுதல் நிறைவேற்ற கோயிலில் முதன்முறையாக தங்கத்தொட்டில் அமைக்கப்பட உள்ளது. இதில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தொட்டிலிலிட்டு பிரார்த்தனை நிறைவேற்றலாம். திருச்செந்தூர் கோயிலின் உப கோயிலான திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயிலுக்கு ரூ.29 லட்சம் செலவில் புதிதாக மரத்தேர் செய்யும் திருப்பணிகள் நடக்க உள்ளது. திருச்செந்தூர் சிவன் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் கோரிக்கை ஏற்று பிரகாரத்தில் புதிய அலங்காரகல்தளம் அமைக்கப்பட உள்ளது. கட்டடவேலை நடந்து கொண்டிருக்கும் ஆனந்த விலாஸ மண்டபம் விரைவில் கட்டட பணி விரைவில் நிறைவடைய உள்ளது. 

கடந்த மே மாதம் பக்தர்களினால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல் மூலம் ஒரு கோடியே 21 லட்சத்து 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த 2011ம் ஆண்டு மே மாத வருவாயை விட 24 லட்சத்து 19 ஆயிரத்து தொள்ளாயிரத்து 68 ரூபாய் அதிகமாகும்.

திருச்செந்தூரில் வைகாசி விசாகம் கோலாகலம்

வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு முருகனி்ன் ஆறுபடை வீடுகளில் ஒன்றானதிருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவையொட்டி சுற்றுப்புறங்களைச்சேர்ந்த ஏராளமானோர் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்து வந்துதங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்

திருச்செந்தூரில் இன்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக, ‌தெற்கு ரயில்வ‌ே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதன்படி இன்று திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது.இச்சிறப்பு ரயில்கள் திருசசெந்தூர் மற்றும் திருநெல்வேலியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிற்கும் என தெற்கு ரயில்வே ‌‌தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவில்கலந்துகொள்ள பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
அறுபடைவீடுகளில் இரண்டாம்படை வீடும், குருபகவான் பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடைபெ ற்று வருகிறது. இதில் வைகாசி விசாக திருநாள் முக்கியமானதாகும். முரு கப்பெருமான் விசாக நட்ச த்திரத்தில் அவதரித்த நாள் விசாக திருவிழாவாக முருகன் குடிகொண்டுள்ள அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று விசாக நட்சத்திரம் வருகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா கோலாகலமாக நடக்கிறது. 
திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபதீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், மற்றகாலங்கள் தொடர்ந்து நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரக்ஷை தீபாராதனை நடக்கிறது. இன்று மாலையில் வசந்த் மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மண்டபத்தை சுவாமி 11முறை வலம் வருகின்றனர். 
பின்னர் கிரிவீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோயிலை வந்து சேர்கிறார். விசாகத் திருவிழா முருகப் பெருமாளின் பிறந்த நாளாக (அவதார தினமாக) கொண்டாடப்படுவதாதால் அன்று ஒருநாள் முருகப்பெருமானை தரிசனம் செய்வது ஒரு வருடம் முழுவதும் தரிசனம் செய்த பலன் கிடைப்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்து திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி சாமித்துரைவேலு தலைமையில் டிஎ ஸ்பி.,ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பிரதாபன், இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் குடிநீர் வசதிக்காக நகரில் முக்கிய இடங்களில் டவுன் பஞ்.,நிர்வாகம் சார்பில் குடிநீர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இய க்கப்ப டுகி றது.திருவிழா விற்பனை ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இ ணை ஆணையர் சுதர்சன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 3ம் தேதி வைகாசி திருவிழா


திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், குரு பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விசாக நட்சத்திம் அன்று முருகன் பிறந்ததால் விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசாக திருவிழா அன்று முருகப்பெருமானை தரிசித்தால் ஆண்டு முழுவதும் முருகனை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் விசாக திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். இந்நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கோயில் நடைதிறப்பு மற்றும் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது; வைகாசி திருவிழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சிக்காலை அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. வரும் 3ம் தேதி விசாக திருநாள் அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 
வரும் 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், 4.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. இவ்வாறு கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். விசாக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், துணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...