திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா கடந்த 22–ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10–ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அதிகாலை 5.55 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 4 ரத வீதிகளின் வழியாக அம்மன் தேர் சென்று, மீண்டும் கோவில் நிலையை சேர்ந்தது.
திரளான பக்தர்கள்
விழாவில் கோவில் இணை ஆணையர் தா.வரதராஜன், அலுவலக கண்காணிப்பாளர் கு.கோமதி, இளநிலை பொறியாளர் சந்தான கிருஷ்ணன், அலுவலர்கள் வெங்கடேசன், சிவா, சிவன் கோவில் மணியம் தமிழரசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
0 comments:
Post a Comment