திருச்செந்தூர் பகுதியில் கடல் சீற்றம்மீன் பிடிப்படகுகள் சேதம்
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழ் நாட்டில் மழை பெய்துவருகிறது.திருச்செந்தூர் பகுதிக் கடல் சீற்றத்துடன் இருந்ததால் அலைகள் படகுகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் வருமான இழப்புடன் தற்போது சேதமடைந்த படகுகளால் நஷ்டமடைந்து உள்ளனர்.
பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் வருகை தரும் திருச்செந்தூர் குப்பை கூழங்களுடன் அசுத்த நகராக உள்ளது வேதனைக்குறியது
திருச்செந்தூருக்கு அயல் நாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்களென ஆயிரக் கணக்கில் தினந்தோறும் வருகின்றனர்.இத்தகயச் சிறப்பு மிக்க ஊரின் முக்கியப்பகுதிகள் , சாலைகள், பேருந்து நிலையங்கள் கழிப்பிடங்கள் ஆகியன
மிகவும் அசுத்தமாக உள்ளன. பேரூராட்சி நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.
மிகவும் அசுத்தமாக உள்ளன. பேரூராட்சி நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் சுவரை உடைத்து புதிய 2 வாசல் போடஅரசு தடை
கடந்த ஆட்சியில் பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக மகாமண்டபத்தின் தெற்குப்பகுதியில் 2 வாசல்களை அமைத்திட முடிவெடுத்தது.இதனை அகில பாரத முருக பக்தர்கள் சங்கம்,மற்றும் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
.இதனை அறநிலையத்துறையும் அப்போதய அறங்காவலர் குழுவும் கண்டு கொள்ளவில்லை.காயாமொழி தை.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள்
மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ,இடைக்காலத்தடை உத்தரவினைப் பெற்றார்.இந்நிலையில் .பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போதைய அரசு பழைய முறையிலேயே நடைமுறை வாசல் உள்ளபடி இருக்க உத்தரவிட்டுள்ளது.பக்தர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று முதல் மணியடி தர்ம தரிசனம் நடைமுறைக்கு வருகிறது
ஆறுபடை வீடுகளில் தனிச்சிறப்பு கொண்ட திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு பல உரிமைகளும் வசதிகளும் கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்டன.
கோயிலின் பழமையான கற் சுவரையே உடைத்துப்பார்க்கத் துணிந்தனர்.
தற்போதுள்ள அரசு புதிய தக்காராக கோட்டை மணிகண்டன் என்பவரை நியமித்துள்ளது.கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பொது தர்மதரிசனத்தை
உடனடியாக பக்தர்களுக்கு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட நாள் கோரிக்கையாக இதனை வைத்துக் கொண்டிருந்த அகில பாரதமுருக பக்தர்கள் பேரவையின் தேசிய தலைவர் எஸ்.எஸ்.ஆதித்தன் இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.