<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> July 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமøந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் நாளை ஆடி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யாவின் பவனி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு அன்னதர்மம் வழங்கப்படுகிறது. 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு, மாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது.தொடர்ந்து மாலை 6 மணிக்க புஷ்ப வாகனத்தில் அய்யா பவனிவருகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு தர்மன் இனிமம் வழங்கப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, 8 மணிக்கு பால் அன்னதர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை மதியம் 2 மணிக்கு அன்னதர்மம், 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, மாலை5 மணிக்கு உகப்படிப்பு,பணிவிடை, இரவு 8 மணிக்கு தர்மம், இனிமம் வழங்கப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்பவாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் பவனிவந்து பக்தர்களுக்கு காட்சிகொடுக்கிறார். 11ம் திருவிழாவான30ம் தேதி காலை 6மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது. 8மணிக்கு பால் அன்னதர்மம் வழங்கப்படுகிறது. 10 மணிக்கு புஷ்ப வாகனத்தில் அய்யாவின் பவனிநடக்கிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடை, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 1 மணிக்கு புஷ்பவாகனத்தில் அய்யாவின் பவனிவருதல் நிகழ்ச்சியும்,2 மணிக்கு தர்மம் இனிமம் வழங்கபடும்.ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் தர்மர், பொருளாளர் ராமையா, உதவிதலைவர் தங்கத்துரை, உதவிசெயலாளர் ராமசந்திரன் மற்றும் நிர்வாக குழுஉறுப்பினர்கள் செய்துவருகின்றனர்..

திருச்செந்தூரில் தீர்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி, நேற்று திருச்செந்தூர் முருகன்

கோயிலில், சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடிய தீர்த்தவாரி நிகழ்ச்சி

நடந்தது. இங்குள்ள, கடற்கரையில் ஏராளமானோர் தங்களது மூதாதையர்கள் நினைவாக

தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதுபோல, ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி

கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி

தரிசனம் செய்தனர்.

குலசை., முத்தாரம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் ஆய்வு


குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆய்வு நடத்தினார்.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. வரு ம் அக்டோபர் மாதம் நø டபெறும் தசரா திருவிழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோயிலில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் வருதைதந்தார். கோயிலில் நடைபெ ற்று வரும் வளர்ச்சி ப்ப ணிகளை ஆய்வு செய்தார். அவரை உடன்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் அம்மன் நாராயணன் தலைமையில் அதிமுகவினர் வரவேற்றனர். மாவட்ட பொருளாளர் ஜெபமாலை மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் மூர்த்தி, உடன்குடி ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பரமசிவம், உடன்குடி ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பரமசிவம், உடன்குடிஒன்றிய பொருளாளர் சுட லை, உடன்குடி பஞ்சாயத்து யூனியன் துணைச் சேர்மன் கல்லாமொழி,இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராகவன்,உதவி ஆணையர் பொன்சுவாமிநாதன், திருச்செந்தூர் கோயில் இணைஆணையர் சுதர்சன், முத்தாரம்மன் கோ யில் நிர்வாக அதிகாரி சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குலசை காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா



குலசேகரன்பட்டணம் காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா
நடந்தது. குலசேகரன்பட்டணம் வடக்கூர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள
காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழாவையொட்டி காலை 11 மணிக்கு
நெல்லை திரு உருமாலை பன்னிரு திருமறை வழிபாட்டு குழு சார்பில் காரைக்கால்
அம்மையார் பதியம் முழுவதும் பாடப்பட்டது. நண்பகல் 1 மணிக்கு மகேஸ்வர
பூஜையும் தொடர்ந்து நாட்டில் நல்ல மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டி
திருஞானசம்பந்தரின் மழை பதிகம் பாடினர்.பின்னர் பேராசிரியர் காளியப்பன்,
புலவர் அகதீஸ்வரன் ஆகியோரின் சமய சொற்பொழிவும் மாலை 5 மணிக்கு மாங்கனி பூஜை
நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதமாக மாங்கனியை இல்லங்குடி,
சண்முகம் ஆகியோர் வழங்கினர்.

திருச்செந்தூரில் தங்க அங்கி அணிவித்து மூலவரை வழிபடும் முறை மீண்டும் அமல்


திருச்செந்தூர் கோயிலில், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து, வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படஉள்ளது. இக்கோயிலில் குறிப்பிட்ட நாட்களிலும், பக்தர்கள் கட்டணம் செலுத்தும்போதும் மூலவர் சுப்பிரமணியர், உற்சவர் சண்முகர், பரிவார தெய்வங்களுக்கு தங்க அங்கி, வைரவேல், அணிகலன்கள் அணிவிக்கப்படும் முறை இருந்தது. ஆனால், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை, கடந்த தி.மு.க., ஆட்சியில் திடீரென ரத்து செய்யப்பட்டது. அந்த முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் ஜெ., உத்தரவுப்படி, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. நேற்று, இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் இதை தெரிவித்தார்.

2011-சுதந்திரதினவிழா ஓவியப்போட்டி-பரிசளிப்பு

மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்குப் பரிசுகளை பழக்கடை திருப்பதி வழங்கினார்.தியாகி பொன்னையாப்பிள்ளை,டாக்டர் தவசிமுத்து,பெ.அசோகன்,ஞானசீலன் ஆகியோர் உள்ளனர்

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...