<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூரில் தங்க அங்கி அணிவித்து மூலவரை வழிபடும் முறை மீண்டும் அமல் | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூரில் தங்க அங்கி அணிவித்து மூலவரை வழிபடும் முறை மீண்டும் அமல்


திருச்செந்தூர் கோயிலில், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து, வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படஉள்ளது. இக்கோயிலில் குறிப்பிட்ட நாட்களிலும், பக்தர்கள் கட்டணம் செலுத்தும்போதும் மூலவர் சுப்பிரமணியர், உற்சவர் சண்முகர், பரிவார தெய்வங்களுக்கு தங்க அங்கி, வைரவேல், அணிகலன்கள் அணிவிக்கப்படும் முறை இருந்தது. ஆனால், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை, கடந்த தி.மு.க., ஆட்சியில் திடீரென ரத்து செய்யப்பட்டது. அந்த முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் ஜெ., உத்தரவுப்படி, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. நேற்று, இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் இதை தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...