<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம் | Tiruchendhur | திருச்செந்தூர்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா திங்கள்கிழமை (அக். 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்தத்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.காலை ஐந்து மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா வருகிறது. ஆறு மணிக்கு சந்தையடியூர் முத்தாரம்மன் தசரா குழு சார்பில்கடற்கரை செல்லும் வழியில் அன்னதானம் நடைபெறுகிறது. காலை ஏழு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு கொடியேற்றமும்நடைபெறுகின்றனபத்து மணிக்கு சிவலூர் தசரா குழு சார்பில் அன்னதானம்நடைபெறுகிறது. பகல் 1 மணி, மாலை 3.30 மணி, 6.30 மணி, இரவு 7.30 மணிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கியத் திருவிழாவான மகிஷாசூரசம்ஹாரம இம்மாதம் 24-ம் தேதி நடைபெறுகிறது.தசரா திருவிழா ஏற்பாடுகளை திருக்கோவில் தக்காரும், உதவி ஆணையருமான செல்லத்துரை, இணை ஆணையர் அன்புமணி, நிர்வாக அதிகாரி சங்கர் மற்றும் கோவில்பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...