திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரைப் பக்தர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.கலியுகத்தின் கன்கண்ட தெய்வமாகத் திகழும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், முருகனின் பிறவியின் நோக்கமான சூரனின் வதம் நிறைவேறிய இடமான அலைவாய் திருச்செந்தூருக்கு வந்தால் வேண்டியனவெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்கள் தெரிந்ததால், தங்களை வருத்தி பாதயாத்திரையாக வரும் நேர்த்திக்கடனைச் செலுத்துவதை பக்தர்கள் விரும்புகின்றனர்.திருமணம் விரைவில் நடப்பதற்காகவும்,வேலை கிடைப்பதற்காகவும்,நோய்கள் நீங்கி நலமான வாழ்க்கை வாழ்வதற்காகவும்,குழந்தைபாக்கியம் கிடைப்பதற்காகவும் முருகா...முருகா...என்று மனமுருகி வேண்டி வருகின்றனர். பால்குடம், காவடி, அலகு குத்தி வருதல் என்று விதம் விதமாக பக்தர்கள் செந்தூர் நோக்கி வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.தைப் பூசத்தை ஒட்டி நாளை அதிகாலை 3.00 மணிக்கு கோயிலின் கதவு நடை திறக்கப்படுகிறது.3.30 மணிக்கு விசுவரூபதரிசனம்,4.00 மணீக்கு உதயமார்த்தாண்ட அபிசேக பூஜை,காலை7.00 மணிக்கு சுவாமி அஸ்திரத்தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும்,மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு 10.15 மணீக்கு உச்சி கால அபிசேகமும்,பகல் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனையும் நடைபெறும்.சுவாமி அலைவாயுகந்தபெருமாள் கோயிலில் இருந்து வெளியே எழுந்தருளுகின்றார்.இரவு 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலாவந்து பக்தர்களுக்குக் அற்புதக் காட்சி அளிக்கிறார்.
0 comments:
Post a Comment