<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 3ம் தேதி வைகாசி திருவிழா | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 3ம் தேதி வைகாசி திருவிழா


திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், குரு பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விசாக நட்சத்திம் அன்று முருகன் பிறந்ததால் விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசாக திருவிழா அன்று முருகப்பெருமானை தரிசித்தால் ஆண்டு முழுவதும் முருகனை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் விசாக திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். இந்நிலையில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கோயில் நடைதிறப்பு மற்றும் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது; வைகாசி திருவிழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சிக்காலை அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. வரும் 3ம் தேதி விசாக திருநாள் அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. 
வரும் 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், 4.30 மணிக்கு விஸ்பரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. இவ்வாறு கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். விசாக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், துணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...