திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவில்கலந்துகொள்ள பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
அறுபடைவீடுகளில் இரண்டாம்படை வீடும், குருபகவான் பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடைபெ ற்று வருகிறது. இதில் வைகாசி விசாக திருநாள் முக்கியமானதாகும். முரு கப்பெருமான் விசாக நட்ச த்திரத்தில் அவதரித்த நாள் விசாக திருவிழாவாக முருகன் குடிகொண்டுள்ள அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று விசாக நட்சத்திரம் வருகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபதீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், மற்றகாலங்கள் தொடர்ந்து நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரக்ஷை தீபாராதனை நடக்கிறது. இன்று மாலையில் வசந்த் மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மண்டபத்தை சுவாமி 11முறை வலம் வருகின்றனர்.
பின்னர் கிரிவீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோயிலை வந்து சேர்கிறார். விசாகத் திருவிழா முருகப் பெருமாளின் பிறந்த நாளாக (அவதார தினமாக) கொண்டாடப்படுவதாதால் அன்று ஒருநாள் முருகப்பெருமானை தரிசனம் செய்வது ஒரு வருடம் முழுவதும் தரிசனம் செய்த பலன் கிடைப்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்து திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி சாமித்துரைவேலு தலைமையில் டிஎ ஸ்பி.,ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பிரதாபன், இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் குடிநீர் வசதிக்காக நகரில் முக்கிய இடங்களில் டவுன் பஞ்.,நிர்வாகம் சார்பில் குடிநீர்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இய க்கப்ப டுகி றது.திருவிழா விற்பனை ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இ ணை ஆணையர் சுதர்சன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment