<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> December 2011 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

ஜனவரி 1இல் குலசை முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட அபிசேகம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட அபிசேகம் நடைபெற உள்ளது.

சஷ்டி விரதம்


ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில்

விரதத்தைத் தொடங்கி,தொடர்ந்து சஷ்டி வரைஆறு நாள் முருகனை

வழிபட்டு விரதமிருப்பது ஆகும்.கந்த சஷ்டி விரதத்தை மகா சஷ்டி விரதம்

என்றும் கூறுவர்.
ஸ்ரீ முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை போராடி வென்றார்.அந்த

வெற்றி விழாவே கந்த சஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது

கார்த்திகை விரதம்


கார்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த

விரதத்தை முதன் முதலில் தொடங்குவர்.தொடர்ந்து ஒவ்வொரு மாதமும்

வரும் கிருத்திகை கிருத்திகையன்று விரதமிருப்பது முறையாகும்.இது

முருகனுக்குரிய நட்சத்திர விரதம்.

சுக்கிர வார விரதம்


இது வெள்ளிக்கிழமை விரதம் ஆகும்.ஒவ்வொரு

வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று முருகனை வழிபட்டு விரதம் காக்க

வேண்டும்.சிலர் செவ்வாய் கிழமை விரதமிருக்கின்றனர்.இந்த இரண்டு

நாட்களும் முருகனுக்கு உகந்த நாட்களாகும்.இது கிழமை விரதம்.

காயத்திரி மந்திரங்கள்

சுப்பிரமணியர் காயத்திரி
ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா சேனாயதீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்
ஸ்கந்த காயத்திரி
ஓம் கார்த்திகேயாய வித்மகே
சக்தி ஹஷ்தாய தீமஹி
த்ந்ந ஸ்கந்த ப்ரசோதயாத்

கோயிலுக்கு வெளியேப் பார்க்க வேண்டியன


அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு வெயிலுகந்தம்மன் திருக்கோயில்
அருள்மிகு துர்க்கை அம்மன் திருக்கோயில்
அருள்மிகு அகத்தியர் திருக்கோயில்
அருள்மிகு மூவர் சமாதி திருக்கோயில்
அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோயில்
அருள்மிகு இடும்பன் திருக்கோயில்
அருள்மிகு தூண்டிகை விநாயகர் திருக்கோயில்
 விண்முட்டும் மேலக் கோபுரம்
 சரவணப்பொய்கை
 கருணை இல்லம்
 கோசாலை
 கோயில் நூலகம்
 கோயில் சித்த மருத்துவச்சாலை

கோயிலுள்ளேப் பார்க்க வேண்டியன


அருள்மிகு பாலசுப்பிரமணியர்
அருள்மிகு சண்முகர்
அருள்மிகு வீரபாகு
அருள்மிகு வீரமகேந்திரர்
அருள்மிகு பார்வதி அம்மன்
அருள்மிகு வினாயகர்
அருள்மிகு பஞ்ச லிங்கங்கள்
அருள்மிகு போகர் சமாது
அருள்மிகு வள்ளி அம்மன்
அருள்மிகு தெய்வானை அம்மன்
அருள்மிகு அறுபத்து மூன்று நாயன்மார்கள்
அருள்மிகு தட்சிணா மூர்த்தி[கோட்ட தேவதை]
அருள்மிகு பால சுப்பிரமணியர்
அருள்மிகு மயூர நாதர்
அருள்மிகு சண்டிகேசுவரர்
அருள்மிகு சனீசுவரர்
அருள்மிகு பைரவர்
அருள்மிகு நாகப்பன்
அருள்மிகு காசி விசுவநாதர்
அருள்மிகு விசாலாட்சி
அருள்மிகு சங்கர நாராயணர்
அருள்மிகு நந்தீசுவரர்
அருள்மிகு வேதபுரீஸ்வரர்
அருள்மிகு வாதபுரீஸ்வரர்
அருள்மிகு நாக நாதேஸ்வரர்
அருள்மிகு நடராசப் பெருமான்
அருள்மிகு குமார விடங்கப் பெருமான் [வள்ளி,தெய்வானை]
அருள்மிகு சித்தி விநாயகர்
அருள்மிகு நூற்றெட்டு லிங்கம்
அருள்மிகு சூர சம்காரமூர்த்தி
அருள்மிகு ஆன்ம லிங்கம்
அருள்மிகு அருணகிரியார்
அருள்மிகு மேலக்கோபுர வாசல் விநாயகர்
அருள்மிகு ரங்கநாதர்
அருள்மிகு கொடிமர விநாயகர்

   இரண்டு சிறப்பு வாய்ந்தக் கொடிமரங்கள் உள்ளன.
கி.பி.862 ஆம் ஆண்டின் பாண்டியர் கால வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பூஜை நேரம் மாற்றப் பட்டுள்ளது.

மார்கழி மாதம் பிறந்ததும் கோயிலின் பூஜா நேரத்தை பக்தர்களின் வசதிக்காக மாற்றப்படுவதுண்டு.17.12.2011 முதல் 14.1.2012 வரை புதிய பூஜா கால விபரம்.
அதிகாலை 3.00மணிக்கு நடை திறப்பு,
3.30மணிக்கு விசுவரூப தீபாராதனை,
4.00மணிக்கு உதய மார்த்தாண தீபாராதனை,
5.00மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை,
6.00மணிக்கு காலசந்தி தீபாராதனை,
7.30மணிக்கு உச்சிகால அபிசேகம்,
8.45மணி முதல்9.00மணி வரை உச்சிகால தீபாராதனை,
மாலை 3.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை,
6.00மணிக்கு ராக்கால அபிசேகம்,
6.45 மணி முதல் இரவு 7.00 மணி வரை ராக்கால தீபாராதனை,
7.30மணிக்கு ஏகாந்த தீபாராதனை,
8.00மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்குப் பின்பு கோயில் நடைதிருக்காப்பிடப்படுகிறது   

திருச்செந்தூரில் சாலைகள் அனைத்தும் சேதம் அரசு நடவடிக்கை எடுக்குமா


அடித்த மழையால் ரோடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன.தாலுகா தலை நகராக உள்ள திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும், கோயிலுக்குஆயிரக்கணக்கான பக்தர்களும் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் தற்போது சபரிமலை பக்தர்களின் வாகனங்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர் .பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் விரும்புகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமிகோயிலில் இலவச திருமண விண்ணப்பம் விநியோகம்


 திருச்செந்தூர் கோயிலின் சார்பில் சமுதாயத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த 100
ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளதாக கோயில் இணை ஆணையர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான திருமண விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்ரீ ஆதிசங்கரரின் உபதேசங்கள்

1.காலையில் எழுந்திரு,கடவுளைக் கும்பிடு,கஷ்டங்கள் குறையும்.
2.விபூதி அணிந்து கொள்,வியாதிகள் குறையும்.
3.ஏழை எளியோர்க்கு உதவி செய்.
4.தினமும் கொஞ்சமாவது கீதை படி.
5.தினமும் கொஞ்ச நேரமாவது பஜனை செய்.
6.இந்திரியங்களையும்,மனதையும் அடக்கிச் சன்மார்க்கத்தில் ஈடுபடு.
7.தாமரை இலையில் உள்ள தண்ணீர் போல இளமை,பணம்,பதவி,ஆயுள் முதலியவைகள் நிலையற்றவை.
8.இந்துமகா சமுத்திரம் போன்ற இந்து தர்மத்தைக் கடைப்பிடி,இன்பமாக வாழ்வாய்.
9.பகவானை நினை ,அவர் ஒருவர்தான் மரணப் பிடியிலிருந்து காப்பாற்றுவார். 

கற்குவேல் அய்யனார் கோயில் சிறப்பு வாய்ந்த கள்ளர் வெட்டுத் திருவிழா

  திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பு என்ற இடம் 4000 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர் வாழ்ந்த தேரிப்பகுதியாகும்.இங்குள்ள தெரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயில் பழம் சிறப்பு வாய்ந்ததாகும்.தமிழகத்திலுள்ள  அனைத்துப்பகுதியிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுமிடமாகும். இக்கோயிலின் கள்ளர் வெட்டுத்திருவிழாவரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருச்செந்தூரில் பெளர்ணமி கிரிவலம்

  அகிலபாரத முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஒவ்வொரு பெளர்ணமி தோறும் திருச்செந்தூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமியின் வெளிப்பிரகாரத்தைச்  மூன்று முறை சுற்றும் வழிபாட்டினை கடந்தநான்கு ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.கிரி வலத்திற்கு தற்போது திருச்செந்தூரும் பெயர்
பெற்று வருகிறது .ஒவ்வொரு பெள்ர்ணமிதோறும் பக்தர்கள் வரலாம். 

கார்த்திகைத் திருவிழா திருச்செந்தூர் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப் பட்டது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகைத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.மாலை 6.15 மணிக்கு மகாமண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது.பின்பு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் சண்முக விலாசத்தில் எழுந்தருளினார்.இரவு 7.30 மணிக்கு கடற்கரையில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது

திருச்செந்தூர் கோயில் உண்டியல் பண்ம் ரூபாய் ஒரு கோடியைத் தாண்டியது

             அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலுக்கு இந்த ஆண்டு கந்தசஷ்டித்               திருவிழா,சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்வதால் ஏற்பட்டுள்ள பக்தர்களின்கூட்டம் இவற்றால் பக்தர்கள் போடும் பணம் கூடிக்கொண்டேப் போகிறது.
             8-11-2011 இல் எண்ணப்பட்ட உண்டியல் பணம் 1,03,45,672 ஆகும்.
  

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...