<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> நவ கைலாசங்கள்-ஆன்மீகச் சுற்றுலா | Tiruchendhur | திருச்செந்தூர்

நவ கைலாசங்கள்-ஆன்மீகச் சுற்றுலா


நவகைலாயகோவில்கள்
நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவத்தலங்களும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில்தான் உள்ளது. அவை வருமாறு :-

பாபநாசம் - சூரியன்
10
நவகைலாயங்களில் முதல் கைலாயமாக திகழ்வது பாபநாசம் பாவநாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர்.  அம்பாள் உலகாம்பிகை.

சேரன்மாதேவி - சந்திரன்
2வது கைலாயமாக திகழ்வது சேரன்மாதேவி அம்மநாத சுவாமி கோவில். இந்த கோவில் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாள் ஆவுடைநாயகி.

கோடகநல்லூர் - செவ்வாய்
இந்த தலம் 3-வது கைலாயமாக விளங்குகிறது.  இங்குள்ள இறைவன் பெயர் கைலாச நாதர். இறைவி பெயர் சிவகாமி அம்பாள். இந்த கோவில் நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சேரன்மாதேவி ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊாில் இருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

குன்னத்தூர் - ராகு
நவகைலாயங்களில் 4-வது தலமாக திகழ்வது குன்னத்தூர் கோதபரமேசுவரர் கோவில் இந்த கோவில் நெல்லை பேட்டையில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள அன்னை சிவகாமி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். (இந்த 4 தலங்களும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது)

முறப்பநாடு - குரு (வியாழன்)
5-வது தலம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நெல்லையில் இருந்து வல்லநாடு கொங்கராயகுறிச்சி கலியாவூர் உழக்குடி பூவாணி ஆழ்வார் கற்குளம் செல்லும் டவுன் பஸ்கள் இங்கு செல்லும். இது தவிர பாளை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்கள் முறப்பநாட்டில் நின்று செல்லும்.

ஸ்ரீவைகுண்டம் - சனி
நவகைலாயங்களில் 6-வது தலம் ஸ்ரீவைகுண்டம் கைலாயநாதர் கோவில். இது பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இது குமர குருபர சுவாமிகள் அவதரித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்திருப்பேரை - புதன்
இந்த தலங்களில் 7-வதாக இடம் பெறுவது தென்திருப்பேரை கைலாயநாதர் கோவில். இங்கு சுவாமி சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு. இக்கோவில் நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.

ராஜபதி - கேது
நவகைலாயங்களில் 8-வது கைலாயமாக திகழ்வது ராஜபதி தலம் ஆகும். இக்கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டது. முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது. அதையே தற்போது பக்தர்கள் வணங்குகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்த மணத்தி கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் வடக்கே அமைந்து உள்ளது. இக்கோவிலில் இருந்ததாக கூறப்படும் நந்தி தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
இந்த திருத்தலங்களில் 9-வது கைலாயமாக திகழ்வது சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர் கோவில். இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இந்த தலத்தின்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. இந்த நவ தலங்களில் வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கி அவைகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.


கோவில்
திறப்பு நேரம்
காலை
மாலை
பாபநாசம்6.30 மணி முதல் 12 மணி வரை5 மணி முதல் இரவு 7 மணி வரை
சேரன்மாதேவி9 மணி முதல் 10 மணி வரை4 மணி முதல் மாலை 5 மணி வரை
கோடகநல்லூர்9 மணி முதல் 10 மணி வரை5 மணி முதல் இரவு 7 மணி வரை
குன்னத்தூர்7 மணி முதல்   8 மணி வரை5 மணி முதல் மாலை 6 மணி வரை
முறப்பநாடு7 மணி முதல்   9 மணி வரை5 மணி முதல் இரவு 7 மணி வரை
ஸ்ரீவைகுண்டம்6 மணி முதல் 10 மணி வரை4 மணி முதல் இரவு 8 மணி வரை
தென்திருப்பேரை7 மணி முதல்   9 மணி வரை5 மணி முதல் மாலை 6 மணி வரை
சேர்ந்தபூமங்கலம்7மணிமுதல்  9 மணி வரை5 மணி முதல் மாலை 6.30 மணி வரை
 

2 comments:

  1. இராஜபதி கோவில் குறித்த தற்போதைய நிலையை வெளிப்படுத்துங்கள். அனைத்து பூஜைகளும் தற்போது சீறும் சிறப்புமாக நடைபெறுகிறது.

    ReplyDelete
  2. இராஜபதி கோவில் பற்றி கூறவும் நடை திருப்பவும்

    ReplyDelete

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...