<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> வென்றிமாலைக் கவிராயர் | Tiruchendhur | திருச்செந்தூர்

வென்றிமாலைக் கவிராயர்


வென்றிமாலைக் கவிராயர்


திருச்செந்தூரில் முருகனுக்குத் தொண்டு செய்யும் திரிசுதந்திரர் குடும்பத்தில் வென்றிமாலை பிறந்தார்.தொடக்கக் காலக்கல்வி கசந்தது.செந்திலாண்டவன் கோயிலைச் சுற்றுவது,முருகனின் நாமத்தை எந்நேரமும் கூறுவது,மனம் போலப் பாடுவது எனத் தொடர்ந்து வந்தார்.தந்தையின் கண்களுக்கு பொறுப்பற்றப் பிள்ளையாக வென்றிமாலைக் காட்சி அளித்தார்.வாழ்க்கையை நடத்துவதற்கு உதவியாக அமையுமென திருக்கோயில் மடப்பள்ளியில் கையாளாகச் சேர்த்து விட்டார்.முருகனின் பூஜைக்காக பிரசாதங்கலைச் சமைத்து வழங்கவேண்டியது இவரது பொறுப்பு.இவ்வாறிருக்கும்போது ஒருநாள் செந்திலாண்டவனைச் சிந்தித்து தியானத்தில் இருந்து விட்டார் வென்றிமாலை.பூஜைக்கு வேண்டிய பிரசாதம் தயாரிக்கப்படவில்லை. சண்முகருக்கு பூஜைக்கு வேண்டிய பிரசாதத்தை வாங்க வந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.எதற்கும் உதவாதவன் என்று கூறி நையப்புடைத்து விரட்டி விட்டனர்.மனம் வருந்திய வென்றிமாலை கடற்கரையில் அமர்ந்து சிந்தித்தார்.இனி உயிரோடிருப்பதில் அர்த்தமில்லை என்று கடலில் விழுந்து உயிரை விடத் துணிந்தார்.அந்நேரம் நில் என்ற குரல் கேட்டது முதியவர் வடிவில் வந்த முருகன் வென்றிமாலையைத் தடுத்து,செவலூர் என்ற ஊரில் வாழும் கிருஷ்ண சாஸ்திரியைப் பார்,என்று கூறி மறைந்தார். வென்றிமாலை செவலூர் சென்று முருகனின் கட்டளையை சாஸ்திரிகளிடம் கூறினார்.மனம் மகிழ்ந்த சாஸ்திரி,தாம் வட மொழியில் பாடிவைத்திருந்த திருச்செந்தூர்மகாத்மியத்தை [திருச்செந்தூர் தலபுராணம்]தமிழில் பாடக் கூறினார்.எப்படிப் பாடுவேன்...ஏதோ நாவில் வந்ததைப் பாடி வந்தேன்.தமிழே சரியாக அறியாத நான் எப்படிப் பாடுவது...என்றார்.செந்திலாண்டவனை நினைத்துப் பாடு என்றார் சாஸ்திரி.முருகனை நினைத்துப் பாடலைத் தொடங்கினார்.வென்றிமாலையின் அறிவிலும் நாவிலும் முருகன் குடி கொண்டான்.சிவபெருமானை முதலாவதாக வைத்து 899 பாடல்களை இனிய,எளிய தமிழில் பாடினார்.வென்றிமாலையின் கவித்திறன் கண்ட கிருஷ்ண சாஸ்திரி ‘வென்றிமாலைக் கவிராயர்‘என்ற பட்டத்தை வழங்கினார்.தாம் பாடிய திருச்செந்தூர் தல புராணச் சுவடிகளுடன் திருச்செந்தூர் வந்தார் தாமியற்றியப் பாடல்களை அரங்கேற்றப் போகிறேன் என்று கூறினார்.அவருடைய உறவினர்கள் வென்றிமாலைக்குப் பித்துப் பிடித்து விட்டது என்று கேலி பேசினர்.கோயில் நிர்வாகிகளிடம் அரங்கேற்றம் செய்வது குறித்து அனுமதி வேண்டினார்.சமையல் கூடத்தில் வேலை செய்தவனாவது கவிதை பாடுவதாவது என்று புறம் தள்ளினர் கோயில் நிர்வாகிகள்.தனக்கும் தனது திருச்செந்தூர் தல புராணநூலுக்கும் நேர்ந்த அவமானத்தால் மனமுருகி அழுதார்.தலபுராணச் சுவடிகளை கடலினுள் எறிந்து விட்டு தவமிருந்தார்.நீண்டநாள் தவத்தால் முருகனடி சேர்ந்தார்.கடலில் இட்ட ஏடு நீரோட்டத்தை எதிர்த்துச்சென்று ஈழநாட்டில் பனைமுனை என்ற இடத்தில் கறை ஏறியது.அவ் ஏடுகள் முருகனடியார் ஒருவரது கையில் கிடைத்தது.அந்நூலையும் அதன் பொருளையும் அறிந்த அடியார் மெய்சிலிர்த்தார் முருகன் தனக்குக் கொடுத்த பிறவிப் பயன் என்று கொண்டாடினார்.தினமும் ஏடுகளுக்குப் பூ இட்டு தூப தீபம் காட்டி பூஜை வைத்து வழிபட்டார்.அந்நாளில் கொடிய நோய் ஒன்று அவ்வூரில் பரவியது.பலர் மாண்டனர்.ஆனால் திருச்செந்தூர் தல புராணம் இருந்த அடியார் வீட்டிலும், அத்தெருவிலும் நோய் புகவில்லை ; பரவவில்லை.இவ்வற்புதம் ஈழ நாடு முழுவதும் பரவியது.வென்றிமாலைக் கவிராயர் திருச்செந்தூரில் அரங்கேற்ற நினைத்த தலபுராணம் அயல் நாடுகளில் மக்களின் உள்ளங்களில் அரங்கேறியது.திருச்செந்தூரில் வேதமோதும் திரிசுதந்திரர் குடும்பத்தில் தோன்றிய வென்றிமாலை முருகனின் அருள் தொண்டராவார்.

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...